'வெள்ளை மாளிகையில் ஜொலித்த பட்டு புடவை'... 'இந்திய சாப்ட்வேர் இன்ஜீனியருக்கு அடித்த ஜாக்பாட்'... டிரம்ப் சொன்ன குட்டி ஸ்டோரி!
முகப்பு > செய்திகள் > இந்தியாவெள்ளை மாளிகையில் நடக்கும் சில அப்பூர்வமான சம்பவங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்களாக மாறிவிடும். அந்த வகையில் தற்போது நடந்துள்ள நிகழ்வு ஒன்று வெள்ளை மாளிகை வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
இந்தியா, பொலிவியா, சூடான், கானா, லெபனான் போன்ற ஐந்து வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அமெரிக்க நாட்டின் குடியுரிமை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தியாவைச் சேர்ந்த பெண் சாப்ட்வேர் இன்ஜீனியர் சுதா சுந்தரி நாராயணன் என்பவர் பங்கேற்றார். ஜனாதிபதி டிரம்ப் முன்னிலையில் அவர் அந்நாட்டுக் குடிமகளாக உறுதியேற்றுக் கொண்டார்.அவருக்கு அமெரிக்கக் குடியுரிமைக்கான சான்றிதழை டிரம்ப் வழங்கினார்.
இதனிடையே இந்த நிகழ்வு அமெரிக்க வெள்ளை மாளிகை வரலாற்றில் இது ஒரு அரிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. குடியுரிமைக்கான சான்றிதழை வழங்கிய டிரம்ப் சுதா சுந்தரி நாராயணன் குறித்துப் பேசினார். அப்போது ''சுதா சுந்தரி நாராயணன் மிகவும் திறமையான சாப்ட்வேர் டெவலப்பர். அவர் தொழில்நுட்ப துறையில் பல பங்களிப்புகளை ஆற்றியுள்ளார். அவரது சிந்தனைகளும், பல்வேறு புதிய யோசனைகளும் நிச்சம் ஐடி துறையில் பல வளர்ச்சிகளுக்கு வழிவகுக்கும் என டிரம்ப் பேசினார். இறுதியாக அமெரிக்கக் குடியுரிமை பெற்ற நீங்கள், அமெரிக்கச் சட்டவிதிகளைப் பின்பற்ற வேண்டும் என டிரம்ப் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே சாப்ட்வேர் இன்ஜீனியர் சுதா சுந்தரி நாராயணன், குடியுரிமைக்கான சான்றிதழை டிரம்ப் கையால் வாங்கியது அவரை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது. மேலும் சுதா சுந்தரி நாராயணன் குறித்து டிரம்ப் வாழ்த்திப் பேசியது அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Today, President @realDonaldTrump welcomed five of our newest AMERICAN CITIZENS as they took the Oath of Allegiance to the greatest Nation on Earth!
— The White House (@WhiteHouse) August 26, 2020
We are one, PROUD American Family! 🇺🇸 pic.twitter.com/ycL7bZeT04
Sudha Sundari Narayanan became a US citizen yesterday. Pretty sure she may have preferred @POTUS call her Sue instead. 😅 pic.twitter.com/92NqqIEZjq
— Anish Koka (@anish_koka) August 26, 2020
மற்ற செய்திகள்