'கொரோனா மனிதர்கள் மூலம் மட்டும் தான் பரவுமா'?... 'பலரின் கேள்விக்குக் கிடைத்த விடை'... இந்திய விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகழிவு நீர் மூலமாகவும் கொரோனா பரவும் என்பதை இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த ஆய்வு மூலம் வெளிவந்த தகவல் என்ன என்பது குறித்த விரிவான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
கொரோனா பரவ ஆரம்பித்த காலத்திலிருந்து அது கழிவு நீர் மூலமாகப் பரவுமா என்பது குறித்த கேள்வி பரவலாக இருந்து வந்தது. தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ஐ.ஐ.டி. விஞ்ஞானிகள், கழிவுநீரில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வில் ஈடுபட்டார்கள். ஐ.ஐ.டி.யின் புவி அறிவியல் துறைத் தலைவர் மணீஷ் குமார் தலைமையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கடந்த மே 8-ந் தேதி முதல் 27-ந் தேதிவரை சேகரிக்கப்பட்ட கழிவுநீர் மாதிரிகளை வைத்து ஆய்வு நடத்தப்பட்டது.இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு, கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வரும் ஆமதாபாத் சிவில் ஆஸ்பத்திரியிலிருந்து தினமும் 10 கோடியே 60 லட்சம் லிட்டர் கழிவுநீர் வருகிறது. இந்த ஆய்வில் கொரோனா வைரஸ் மரபணுவை ஒத்துள்ள 3 வைரஸ் படிமங்கள் கழிவுநீரில் கண்டறியப்பட்டுள்ளன.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், மே 8-ந் தேதி காணப்பட்ட வைரஸ் அடர்த்தியை விட மே 27-ந் தேதி வைரஸ் அடர்த்தி அதிகமாக இருந்தது. ஆமதாபாத் சிவில் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வைரஸ் அடர்த்தி அதிகரித்துள்ளது. எனவே கழிவுநீர் மூலம் கொரோனா பரவுவது தற்போது தெரிய வந்துள்ளது. கழிவுநீர் மூலமாக கொரோனா பரவுகிறது என்பதை இத்தாலி உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே கண்டுபிடித்த நிலையில், இந்தியாவும் அதனை உறுதி செய்துள்ளது.
இத்தாலியில் கொரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே, கழிவுநீரில் கொரோனா வைரஸ் மரபணு போன்ற வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே, மனிதர்கள் மூலம் கொரோனா பரவும் என்ற கூற்றில் மாற்றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்படும் மனிதர்களின் கழிவுகளில் கொரோனா வைரஸ் இருப்பது சமீபத்திய ஆய்வுகளில் கண்டறியப்பட்ட நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேநேரத்தில் கழிவுநீரில் கொரோனா எப்படிப் பரவியது, அதனைத் தடுக்க என்ன செய்யலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய இந்த ஆய்வு முடிவுகள் உதவியாக இருக்கும் என, இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் கூறியுள்ளார்கள்.
மற்ற செய்திகள்