திருப்புமுனை: கொரோனா வைரஸின் முழு 'மரபணுவையும்'... வரிசைப்படுத்துவதில் 'இந்திய' விஞ்ஞானிகள் வெற்றி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாளுக்குநாள் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு உலகளவில் இன்னும் எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உலக நாடுகள் அனைத்தும் சமூக விலகல் மற்றும் ஊரடங்கு ஆகிய வழிமுறைகளை தீவிரமாக கடைபிடித்து வருகின்றன.

திருப்புமுனை: கொரோனா வைரஸின் முழு 'மரபணுவையும்'... வரிசைப்படுத்துவதில் 'இந்திய' விஞ்ஞானிகள் வெற்றி!

இந்த நிலையில் குஜராத் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் முழு மரபணுவையும் வரிசைப்படுத்துவதில் தற்போது வெற்றி கண்டுள்ளனர். இதுகுறித்து குஜராத் முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், '' "குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் (ஜிபிஆர்சி) விஞ்ஞானிகளுக்கு இந்த சாதனை பெருமை அளிக்கிறது. கொரோனா வைரஸின் முழு மரபணு வரிசையையும் கண்டறிந்துள்ள  ஒரே மாநில அரசு ஆய்வகமாகும். இது வைரஸி ன்  தோற்றம், மருந்து இலக்குகள், தடுப்பூசி மற்றும் வைரஸுடன் தொடர்பு கொள்ள உதவும்,'' என தெரிவித்து உள்ளது.

முன்னதாக இந்தியாவில் உள்ள இரண்டு வவ்வால்களில் கொரோனா வைரஸ்களைக் கண்டறிந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.