ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. கொரோனா லாக்டவுனில் நிறுத்தப்பட்ட சேவை மீண்டும் வரப்போகுது..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரயில் பயணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. கொரோனா லாக்டவுனில் நிறுத்தப்பட்ட சேவை மீண்டும் வரப்போகுது..!

26 வயசுல மரணம்.. மைக்ரோசாஃப்ட் சிஇஓ-வின் மகன் பற்றி வெளியான உருக்கமான தகவல்..!

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருவதால், மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அனைத்து மாநிலங்களிலும் பாதிப்புகள் குறைந்து வருகின்றன. அதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வருகிறது.

முன்பு கொரோனா லாக்டவுனின் போது, ரயில்களில் முன்பதிவு செய்யப்படாதவர்களுக்கான பெட்டிகளை ரயில்வே நிர்வாகம் நீக்கியது. மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடாமல் இருப்பதற்காகவும், தனிநபர் இடைவெளியை உறுதி செய்யும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 Indian Railways resumes unreserved passenger services

இந்த நிலையில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் சேவையை தொடங்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விரைவில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவில்லா பெட்டிகள் பொருத்தப்படும் என கூறப்படுகிறது. இதனால் மக்கள் பழையபடி முன்பதிவு இல்லாமல் ஜெனரல் கோச்சில் பயணிக்க முடியும். இது ரயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சில ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் சேவை தொடங்கியிருந்தாலும் தற்போது முழு வீச்சில் இயங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

அதேபோல் பனிமூட்டம் காரணமாக 100-க்கும் மேற்பட்ட ரயில்கள் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை ரத்து செய்யப்பட்டன. இந்த ரயில்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் நடந்த பயங்கரம்.. உக்ரைனில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்.. அதிர்ச்சி தகவல்..!

INDIAN RAILWAYS, UNRESERVED PASSENGER SERVICES, GENERAL COACHES, EXPRESS TRAINS, ரயில்வே நிர்வாகம், ரயில் பயணிகள்

மற்ற செய்திகள்