‘மொத்தம் 1.84 லட்சம் பேர்’.. ‘ரூ. 4 கோடி அபராதம்’.. இனி ரயில்வே ஸ்டேஷன்ல இத பண்ணாதீங்க..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரயில்வே நிலையங்களில் குப்பைகளை வீசிய சுமார் 1.84 லட்சம் பயணிகளிடம் 4 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மொத்தம் 1.84 லட்சம் பேர்’.. ‘ரூ. 4 கோடி அபராதம்’.. இனி ரயில்வே ஸ்டேஷன்ல இத பண்ணாதீங்க..!

இந்தியா முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர்புறம் மற்றும் கிராமங்களில் பொது இடத்தில் குப்பை கொட்டுவதால் ஏற்படும் சுகாதரக்கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அந்த வகையில் ரயில் நிலையங்களிலும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. இதில் ரயில் நிலைய வளாகத்தில் பயணி ஒருவர் குப்பையை வீசினால் அவருக்கு பாதுகாப்புப்படையினர் அதிகபட்சமாக ரூ.500 அபராதம் விதிக்கின்றனர்.

இந்த நிலையில் தெற்கு ரயில்வேயில் உள்ள 6 கோட்டங்களிலும் ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பை வீசியவர்களிடம் கடந்த 3 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட அபாரத தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு ரயில்கள் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் குப்பை வீசிய 47,441 பயணிகளிடம் இருந்து ரூ. 95,39,820 வசூலிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு 74,779 பயணிகளிடமிருந்து ரூ.1,65,32,410 வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு 57,878 பயணிகளிடம் இருந்து ரூ. 1,30,71,450 வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடப்பு ஆண்டு (2020) ஜனவரி மாதம் வரை கடந்த 3 ஆண்டுகளில் 1,84,773 பயணிகளிடம் இருந்து மொத்தமாக ரூ. 4,01,74,880 வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.