'நாடாளுமன்றத்தில்' ஒருவருக்கு 'கொரோனா'!.. குடும்பத்தினர் உட்பட 'தனிமைப்படுத்தப் பட்ட 11 பேர்!'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நாடாளுமன்றத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.

'நாடாளுமன்றத்தில்' ஒருவருக்கு 'கொரோனா'!.. குடும்பத்தினர் உட்பட 'தனிமைப்படுத்தப் பட்ட 11 பேர்!'

நாடாளுமன்றத்தில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் பல நாட்களாக வேலைக்கு வரவில்லை என்றும் அவருக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் இருந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து அவர் டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை அடுத்து அந்த நபரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 11 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதோடு, அவற்றின் முடிவுகளுக்காகவும் காத்திருந்தனர். இதனிடையே விசாரித்ததில் அந்த நபர் நாடாளுமன்றத்தின் முக்கிய அவை நேரங்களில் பணிபுரியவில்லை என்றும், மக்களவை செயலகத்தில் மட்டுமே பணிபுரிந்து வந்த அவர், நாடாளுமன்ற அவை ஒத்திவைக்கைப்பட்ட மார்ச் 23-ஆம் தேதி முதலே, அந்த நபர் வேலைக்கு வராமல் வீட்டிலேயே இருந்ததாகவும் தெரியவந்துள்ளன.

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.