'கொரோனா அஞ்ஜிங்??'.. 'அதெல்லாம் முடியாது.. நான் அவள கல்யாணம் செஞ்சிங்!!'.. வைரல் ஆகும் இந்தியர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகி உலகையே அச்சுறுத்தி வந்துள்ள நிலையில், தான் காதலித்த சீன பெண்ணை கரம் பிடித்துள்ளார் மத்திய பிரதேச இளைஞர். மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சவுர் பகுதியை சேர்ந்தவர் சத்யார்த் மிஸ்ரா. இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக கனடாவில் படிக்கச் சென்றபோது, சீனாவைச் சேர்ந்த ஜிஹாவோவை, காதலித்துள்ளார். அதன் பிறகு சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

'கொரோனா அஞ்ஜிங்??'.. 'அதெல்லாம் முடியாது.. நான் அவள கல்யாணம் செஞ்சிங்!!'.. வைரல் ஆகும் இந்தியர்!

ஆனால் இதனிடையே சீனாவில் கொரோனா வைரஸ் உருவாகி, உலகெங்கும் பரவியத் தொடங்கியதை அடுத்து,  சீனாவிலிருந்து இந்தியா வரும் பயணிகள் தீவிரமான உடற்பரிசோதனைக்கு பிறகே நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னதாக உறுதி செய்யப்பட்ட சத்யார்த் - ஜிஹாவோ திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா என்பதே சந்தேகமாக இருந்துள்ளது.

ஆனால் என்ன நடந்தாலும் தன் காதலரை கரம் பிடித்தே தீரும் முயற்சியில், ஜிஹாவோ மற்றும் அவரது தாய், தந்தை உட்பட 5 பேர் ஜனவரி 29-ஆம் தேதி இந்தியா வந்தனர். இவர்களை மண்ட்சவுர் மாவட்ட மருத்துவமனை டாக்டர் ஏ.கே.மிஸ்ரா தலைமையில் பரிசோதனை செய்தபோது 5 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து இருவருக்கும் நேற்று (பிப்.,02) தடபுடலாக திருமணம் நடைபெற்றது. இதுகுறித்து பேசிய மணப்பெண் ஜிஹாவோ,‘5 ஆண்டுகளாக காதலித்த நாங்கள், திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்.  திருமணம் முடிந்ததும் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க இருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவக் கூடாது என்பதே எங்களின் விருப்பம். ஒருவேளை அதற்கான அதன் அறிகுறி தென்பட்டால் நாங்கள் எங்கள் நாட்டுக்கு உடனடியாக திரும்புவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

WUHAN, CHINA, MARRIAGE, WEDDING