'வந்துட்டோம்னு சொல்லு... கொரோனாவ ஒழிக்க வந்துட்டோம்னு சொல்லு'... 'கொரோனாவை ஒழிக்கும் தடுப்பூசி ஆராய்ச்சி... தலைமையேற்ற இந்திய விஞ்ஞானி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கும் குழுவை இந்திய வம்சாவளி விஞ்ஞானி வழி நடத்தி வருகிறார்.

'வந்துட்டோம்னு சொல்லு... கொரோனாவ ஒழிக்க வந்துட்டோம்னு சொல்லு'... 'கொரோனாவை ஒழிக்கும் தடுப்பூசி ஆராய்ச்சி... தலைமையேற்ற இந்திய விஞ்ஞானி!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 635 பேர் பலியாகியுள்ளனர். சுமார், 30, 840 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 3,863 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான குழு கொரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்க ஆய்வகத்தில் வைரஸின் முதல் தொகுப்பை உருவாக்கியுள்ளது.

வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறிவதற்கு அதை தனியே பிரித்தெடுப்பது, ஆய்வகத்தில் வளர்த்தெடுப்பது ஆகிய இரண்டும் முக்கியமான நிலைகள் ஆகும். தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆய்வுக்கு இது முக்கியம் என்ற நிலையில், பேராசிரியர் எஸ்.எஸ்.வாசன் தலைமையிலான ஆய்வுக்குழு இந்த முயற்சியில் வெற்றிகண்டுள்ளது.

பிட்ஸ் பிலானி மற்றும் பெங்களூரூ ஐஐஎஸ்சி-யில் உயர்கல்வி பயின்ற எஸ்.எஸ்,வாசன், டெங்கு, சிக்கன் குனியா மற்றும் ஜிகா வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

CORONA, VACCINATION, INDIAN