"இதுக்காகவா வேலைய விட்டாங்க??".. ஒன்றாக தம்பதியினர் எடுத்த முடிவு.. வியக்க வைக்கும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாதம்பதியினர் ஒருவர் தங்களது வேலையை விட்டு விட்டு தற்போது செய்துள்ள செயல் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் நிகில். இவரது மனைவியின் பெயர் பரிதி. இவர்கள் இருவரும் கார்ப்பரேட் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படும் நிலையில், தங்களது வேலையில் இருந்தும் அவர்கள் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
அப்படி வேலையை இவர்கள் ராஜினாமா செய்ததற்கான காரணம் தான், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் பேசு பொருளாக மாறி உள்ளது.
வேலையில் இருந்து விலகிய நிகில் மற்றும் பரிதி ஆகியோர், மணாலியில் இருந்து ஸ்ரீநகர் வரை சுமார் 3,200 கிலோமீட்டர் ட்ரக்கிங் செய்ய கிளம்பி உள்ளனர். இதற்கு காரணம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக தான். முன்னதாக லடாக் வரை இவர்கள் கடந்த ஆண்டு பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில், அங்கே அதிகம் குளிர் இருந்த காரணத்தினால் தங்களது பயணத்தை பாதியில் நிறுத்தினர்.
தொடர்ந்து இந்த ஆண்டு மீண்டும் கடந்த மார்ச் மாதம் முதல் தங்களின் பயணத்தை லடாக்கில் இருந்து ஆரம்பித்தனர். மணாலியில் இருந்து ஸ்ரீநகர் வரை லடாக் வழியாக கிட்டத்தட்ட 3200 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே செல்லவும் இந்த தம்பதியினர் முடிவு செய்துள்ளனர். மேலும் இந்த ட்ரெக்கிங் பயணத்தை தங்கள் வாழ்க்கையின் மிக அழகான தருணம் என்றும் அவர்கள் குறிப்பிடும் நிலையில், 19 மலைப்பாதைகள் வழியாக Lal Chowk பகுதியை அடைய சுமார் 3200 கிலோ மீட்டர் மலையேற்றம் செய்து முடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னதாக மணாலி வரை பேருந்தில் வந்த நிகில் மற்றும் பரிதி ஆகியோர், இதன் பின்னர் நடந்தே அனைத்து வழிகளையும் கடக்க முடிவு செய்துள்ளனர். இது தவிர, லடாக் பகுதியில் உள்ள நிறைய கிராமங்களுக்கும் இந்த தம்பதியினர் சென்று அங்குள்ள மக்களிடமும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த மலையேற்றத்தில், நிகில் மற்றும் பரிதி ஆகிய இருவரும் ஈடுபடுவதற்கு முன்பாகவே இதற்கான பயிற்சிகளையும் அவர்கள் மேற்கொண்டு தயாரானதாக கூறப்படுகிறது. இந்த மலையேற்ற சமயத்தில் எந்தெந்த கிராமங்களை அவர்கள் கடக்கிறார்களோ அங்கே ஒரு மரத்தை நட்டு விட்டு செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தவிர கையில் குப்பை சேகரிக்கும் பையுடன் அவர்கள் செல்லும் வழியில் உள்ள குப்பைகளை அள்ளிக் கொண்டு சென்றதாக குறிப்பிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்