தப்பு செஞ்சிருந்தா கூட பரவா இல்ல...! செய்யாத தப்புக்கு 'இப்படியொரு' தண்டனை...! - 'சவுதி'யிலிருந்து வந்தவரை 'கண்ணீரோடு' வரவேற்ற குடும்பம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசவூதி இளவரசர் குறித்து தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட இந்தியர் தற்போது விடுவிக்கப்பட்டு இந்தியா திரும்பியுள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் பிஜாடி கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதான ஹரீஷ் பகேரா. இவர் சவுதி அரேபிய நகரமான டம்மனில் ஏர் கண்டிஷனர் டெக்னீஷியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2019 டிசம்பர் 22-ம் தேதி சுவூதி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தன் கணவர் கைது செய்யப்பட்டத்தை குறித்து ஹரீஷ் பகேராவின் மனைவி சுமன், உடுப்பி போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காரணத்தை விசாரித்ததில், ஹரீஷ் பகேரா, இந்தியாவில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக தனது எதிர்காலத் திட்டம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்துடன் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
அதோடு, சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பதிவிட்டதால் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தது.
இந்நிலையில் சுமார் 604 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த ஹரீஷ் பகேரா, நீதிமன்ற விசாரணைகள் முடிந்து குற்றமற்றவர் எனக் கூறி விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதோடு, நேற்று (18-08-2021) இந்தியா வந்தடைந்த ஹரீஷ் பகேரா, பெங்களூரு விமான நிலையத்தில் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
ஹரீஷ் மனைவி உடுப்பி போலீஸில் கொடுத்த புகாரின் பெயரில் நடத்தப்பட்ட விசாரணையில், தட்சிணா கன்னடா மாவட்டம் முட்பித்ரி நகரைச் சேர்ந்த அப்துல் ஹியூஸ் மற்றும் அப்துல் தியூஸ் ஆகிய இரண்டு சகோதரர்கள் தான், ஹரீஷ் தனது ஃபேஸ்புக் கணக்கை மூடிய நாளில், மீண்டும் ஹரீஷ் பெயரில் புதிய கணக்கை தொடங்கி உள்ளனர்.
அதில், குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவு, சவுதி இளவரசர் குறித்த சர்ச்சை கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அதோடு அப்துல் ஹியூஸ், அப்துல் தியூஸ் ஆகியோருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் உடுப்பி எஸ்பி விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்