'நடுவானில் எரிபொருள் நிரப்பும் காட்சி...' '30,000 அடி உயரத்துல வச்சு நடந்த ஆச்சரியம்...' - வைரலாகும் புகைப்படங்கள்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய ராணுவத்திற்கு தயாரிக்கப்பட்ட ரபேல் போர் விமானங்கள், நடுவானில் எரிபொருள் நிரப்பிய புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய ராணுவத்திற்காக உருவாக்கப்படும் ரபேல் போர் விமானங்கள் தயாரிப்பு ஐரோப்பிய நாடான பிரான்ஸ் ஒப்படைக்கப்பட்டன. தற்போது ஐந்து, 'ரபேல்' போர் விமானங்கள், பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டன. மேலும் இவை நாளை(ஜூலை 29) இந்தியா வந்து சேரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சுமார் 7,000 கி.மீ., துாரத்தை கடந்து வரும் விமானங்களுக்கு தேவைப்படும் எரிபொருளை நிரப்புவதற்காக, பிரான்ஸ் விமானமும் உடன் அனுப்பப்பட்டுள்ளது.
தற்போது பிரான்ஸ் விமானத்தின் மூலம், ரபேல் விமானங்கள் நடுவானில், 30,000 அடி உயரத்தில் எரிபொருள் நிரப்பும் காட்சியின் புகைப்படம் வெளியாகி உள்ளது. வைரலாகிய இந்த புகைப்படங்கள் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS