Job Alert: இந்திய விமானப் படையில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் இளைஞர்கள் பலருக்கு இந்திய பாதுகாப்பு படைகளில் சேரும் ஆர்வம் சமீப காலமாகவே அதிகரித்துவருகிறது. மேலும், பாதுகாப்பு பிரிவுகளில் அப்ரண்டிஸ் பயிற்சி பெற இளைஞர்களை சேர்க்க அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகும். இதற்காக பல படித்த இளைஞர்கள் காத்திருந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை மகிழ்விக்கும் வகையில் இந்திய விமானப்படையில் 80 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஏர்போர்ஸ் அப்ரண்டிஸ் பயிற்சி மூலம் நிரப்புவதற்கான அறிவிப்புகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. இதுகுறித்து கீழே விரிவாகக் காணலாம்.

Job Alert: இந்திய விமானப் படையில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

காலியிடங்களின் எண்ணிக்கை:

மெஷினிஸ்ட்: 04 இடங்கள்

ஷிட் மெட்டல்: 07 இடங்கள்

வெல்டர் கேஸ் & எலெக்ட்: 06 இடங்கள்

மெக்கானிக் ரேடியோ ரேடார் விமானம்: 09 இடங்கள்

தச்சர்: 03 இடங்கள்

எலக்ட்ரீசியன் ஏர்கிராப்ட்: 14 இடங்கள்

பெயிண்டர் ஜெனரல்: 01 இடங்கள்

பிட்டர்: 26 இடங்கள்

Indian Air Force Recruitment: Here how to apply

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10வது அல்லது 12வது இடைநிலை வகுப்பு தேர்ச்சி மற்றும்  50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். இதுதவிர, ஐடிஐ-யில் தேர்ச்சி மற்றும் 65% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள இந்த பணியிடங்களில் சேர விண்ணப்பிக்கும் இளைஞர்கள்  14 முதல் 21 வயது கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 7700 ரூபாய் ஊதியமாக அளிக்கப்படும் என விமானப் படை அளித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Indian Air Force Recruitment: Here how to apply

இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகவே ஏற்கப்படும் என விமானப்படை தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அறிக்கையின்படி, 01 ஏப்ரல் 2022 அன்று தொடங்கும் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி 19, 2022 ஆகும்.

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்  www.indianairforce.nic.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AIRFORCE, JOB, விமானப்படை, வேலைவாய்ப்பு, இந்தியா

மற்ற செய்திகள்