'நீங்கியது 3 மாத தடை'... 'இந்தியாவிலிருந்து துபாய் போறீங்களா'?... ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவிலிருந்து அமீரகம் வரும் பயணிகளுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

'நீங்கியது 3 மாத தடை'... 'இந்தியாவிலிருந்து துபாய் போறீங்களா'?... ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இந்தியாவிலிருந்து அமீரகத்துக்கு வரும் விமானச் சேவை 3 மாத தடைக்குப் பின்னர் கடந்த 5-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானச் சேவையானது தமிழகத்தின் சென்னை, திருச்சி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து இயக்கப்படுகிறது.

விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் துபாய், அபுதாபி உள்ளிட்ட விசாவை பொறுத்துச் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளின் அனுமதியை முறையாகப் பெற்றிருக்க வேண்டும். 48 மணி நேரத்துக்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் க்யூ.ஆர். குறியீட்டுடன் வைத்திருக்க வேண்டும்.

India-UAE flights: Why passengers have to reach airport 6 hours before

அதன் பின்னர் விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதற்கு முன்னர் ரேபிட்  பிசிஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும். இந்த பரிசோதனை விமானம் புறப்படுவதற்கு முன்னர் 4 மணி நேரத்தில் தொடங்கப்படும். விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் பரிசோதனை நிறைவடையும்.

India-UAE flights: Why passengers have to reach airport 6 hours before

இந்த பரிசோதனை மற்றும் பயணிகள் கொண்டு வரும் ஆவணங்களைச் சரிபார்க்க வேண்டியிருப்பதால் பொதுமக்கள் விமான நிலையத்துக்கு 6 மணி நேரம் முன்னதாக வர வேண்டும். எனவே காலதாமதத்தைத் தவிர்க்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றி விரைவாக வந்து விமான நிறுவன ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தனது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்