‘10 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசிகள்’... ‘ரஷ்யாவுடன் இணைந்து’... ‘இந்தியாவில் உற்பத்தி செய்யப்போகும் மருந்து நிறுவனம்’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாரஷ்ய நேரடி முதலீட்டு நிதி தயாரிப்பான ஸ்புட்னிக் வி கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்தை இந்தியாவில் உற்பத்தி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ரஷ்யாவின், ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (Russian Direct Investment Fund -RDIF) மற்றும் இந்திய மருந்து நிறுவனமான ஹெட்டெரோ (Hetero) ஆகியவை இணைந்து இந்தியாவில் ஸ்புட்னிக் வி கோவிட் -19 தடுப்பூசியை ஆண்டுக்கு 10 கோடிக்கும் அதிகமான அளவை உற்பத்தி செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக RDIF ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஸ்புட்னிக் வி உற்பத்தியைத் தொடங்க உத்தேசித்துள்ளன. ஹைதராபாத்தைச் சேர்ந்த, ஹெட்டிரோ பயோ பார்மா நிறுவனத்தின் இயக்குனர் முரளி கிருஷ்ணா ரெட்டி, இந்த தகவலை டெல்லியில் வெளியிட்டார்.
‘ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்வதன் மூலம் மேக்கிங் இந்தியா திட்டத்தை இந்தியாவில் அமல் செய்யும் பொறுப்பு தங்களுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருவதாக’ முரளி கிருஷ்ணா ரெட்டி தெரிவித்தார்.
உலக அளவில் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், தடுப்பூசி ஒன்று தான் இதனை கட்டுப்படுத்தும் ஒரே தீர்வு என அனைவரும் அதனை எதிர் நோக்கி காத்துள்ளனர். அப்போதுதான், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த முதல் நாடு என்று ரஷ்யா கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி அன்று அறிவித்தது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என அழைக்கப்படும் இந்த தடுப்பூசியை, கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியது. 2 மாதங்களாக மேற்கொண்ட மனித பரிசோதனைக்கு பின்னர் ரஷியா இந்த தடுப்பூசியை பதிவு செய்து உள்ளது. 95 சதவீதம் இது பலனளிப்பதாக தெரிவித்திருந்தது.
இதற்கிடையில், இதன் நம்பிக்கை தன்மை குறித்து பல நாடுகள் கேள்வி எழுப்பியதால், தற்போது, மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. அவை பெலாரஸ், ஐக்கிய அரபு அமீரகம், வெனிசுலா மற்றும் பிற நாடுகளில் நடந்து வருகின்றன. இரண்டாம் கட்ட சோதனைகள் இந்தியாவில் நடைபெற்று வருவதாக ஆர்.டி.ஐ.எஃப் கூறியுள்ளது.
மற்ற செய்திகள்