'கடவுளே, இந்த பெல்ட் 35,000 ரூபாயா'?... 'மகளை வறுத்தெடுத்த அம்மா'... 'உடனே அவங்க கேட்ட கேள்வி தான் அல்டிமேட்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகள் வாங்கிய 35000 ரூபாய் மதிப்புள்ள பெல்ட்டை பார்த்து ஷாக்கான அம்மா அவருடன் பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய மக்கள் தொகையில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம். பெரும்பாலான மக்கள் மாத சம்பளத்தையே நம்பி இருப்பதால் மாதம் தோறும் பட்ஜெட் போட்டுத் தான் தங்களது குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். இதனால் அத்தியாவசிய தேவைகளைத் தவிர்த்து ஒரு பொருளின் மீது ஆசை இருந்தாலும் அதனை வாங்குவதை பெரும்பாலும் தவிர்த்து விடுவார்கள்.
குறிப்பாக ஐ போன் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதன் விலை காரணமாக ஆண்ட்ராய்டு போன்களே அவர்கள் உபயோகிப்பார்கள். இந்நிலையில் ரூ.35,000க்கு மகள் பெல்ட் வாங்கிய நிலையில், அவருக்கும் மகளுக்கும் நடந்த உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் அனிதா என்பவர் தனது மகள் சபி, புதிதாக வாங்கிய பெல்ட்டின் விலையைக் கேட்டு அதிர்ச்சியாகியிருக்கிறார். குசி(Gucci) என்ற பிராண்ட்டை சேர்ந்த அந்த பெல்ட்டின் விலை ரூ.35,000 ஆகும். அனிதா தனது மகள் புதிதாக வாங்கிய பெல்ட்டை பார்த்திருக்கிறார். அதன் அருகில் பெல்ட்டின் பாக்ஸ் இருந்திருக்கிறது.
அந்த பாக்ஸில் குறிப்பிட்டுள்ள விலையைப் பார்த்து அதிர்ச்சியாகியிருக்கிறார். உடனே அவர் கேட்ட கேள்வி தான் அந்த வீடியோவில் அல்டிமேட் சம்பவமாகப் பார்க்கப்படுகிறது. இந்த பெல்ட்டை பார்க்கும் போது ''இது டெல்லியில் உள்ள டிபிஎஸ் ஸ்கூல் பெல்ட் போல இல்லையா?, இதனைப் போய் எதற்காக அவ்வளவு விலை கொடுத்து வாங்கினாய்? என மகளை அவர் வறுத்தெடுத்தார்.
சிகப்பு , பச்சை வண்ணங்களில் இருக்கும் அந்தப் பெல்ட்டில் குசி பிராண்டின் லோகோ இடம் பெற்றிருக்கிறது. பெல்ட்டின் வண்ணம் டிஎஸ்பி ஸ்கூல் பெல்ட்டை ஞாபகப்படுத்துவது போலிருக்க, இதனைப் போய் இவ்வளவு விலை கொடுத்து வாங்கியிருக்கிறாயே என்பது தான் அவரது கோபத்துக்குக் காரணம். இந்தப் பெல்ட்டை ரூ.150க்கு வாங்கலாமென அவர் திட்டிக்கொண்டிருக்க, அவரது மகள் சபி பின்னாடியிருந்து சிரித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோ இணையத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. பலரும் அனிதாவின் கருத்து, தங்கள் அம்மாவை ஞாபகப்படுத்துவதாக உள்ளது என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்