ஆவலோடு காத்திருக்கும் மக்கள்.. கொரோனா ‘தடுப்பூசி’ எப்போது பயன்பாட்டுக்கு வரும்..? மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் எப்போது கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வருவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ANI செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி மக்களின் பய்ன்பாட்டுக்கு வரும். முதலில் முன்களப்பணியாளர்கள், முதியோர்கள் உள்பட 30 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் கடந்த 4 மாதமாக மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக, 260 மாவட்டங்களில் 20 ஆயிரம் பணியாளர்களுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு, தடுப்பூசியின் வீரியம்தான் எங்களுக்கு முக்கியம்.
Our first priority has been safety & effectiveness of vaccines. We don't want to compromise on that. I personally feel, maybe in any week of January, we can be in a position to give first COVID vaccine shot to people of India: Union Health Minister Dr Harsh Vardhan to ANI pic.twitter.com/I6rNWc4tad
— ANI (@ANI) December 20, 2020
அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள தடுப்பூசி மருந்துகளை, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு பரிசீலனை செய்து வருகிறது. முன்னுரிமை பட்டியலில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதில் தடுப்பூசி போடுவதற்கு தயங்கும் நபர்களுக்கு மருந்தின் பாதுகாப்புத் தன்மை குறித்து மருத்துவர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்படும். ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என முடிவு செய்தவர்களை கட்டாயப்படுத்த முடியாது’ என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்