'இது எல்லாருக்குமே ஷாக்கிங் தான்'... 'இந்த விஷயத்துல சீனாவை ஓவர்டேக் பண்ண போகும் இந்தியா'... அதிர்ச்சி ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பில் சீனாவை இந்தியா விஞ்சிவிடும் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு இன்னும் அமலில் உள்ளது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 81970 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 3967 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 2649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 29920 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில் சீனா வெளியிட்ட தகவலில் அடிப்படையில் அங்கு இதுவரை 82933 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4633 பேர் உயிரிழந்துள்ளனர். 78209 பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுவதால், கொரோனா பாதிப்பில் சீனாவை இந்தியா நாளை விஞ்சிவிடும். சீனாவைப் பொறுத்தவரை அங்குப் பாதிப்பு என்பது குறைவாகவே உள்ளது. இன்றைய நிலவரப்படி அங்கு 91 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரை மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. அங்கு இதுவரை 27524 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1019 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.