'கருப்பு, வெள்ளை, மஞ்சள் பூஞ்சை நோயைத் தொடர்ந்து...' 'அடுத்த கலர்' பூஞ்சை நோய்...! 'உறுதி செய்யப்பட்ட முதல் நபர்...' - மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் முதன்முதலாக பச்சை பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் நபரை மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் ருத்ர தாண்டவமே இன்னும் அடங்காத நிலையில், இதுவரை கேள்விப்படாத கருப்பு வெள்ளை பூஞ்சை வியாதிகளும் பரவி மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியது.
அதன் பின் கருப்பு, வெள்ளை பூஞ்சை நோயை தொடர்ந்து கலர்கலராக மஞ்சள் பூஞ்சை தொற்றும் பரவியது.
இந்நிலையில் தற்போது மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் வசிக்கும் 34 வயதுடைய நபர் ஒருவருக்கு இந்த பச்சை பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் கடந்த ஒன்றரை மாதங்களாக, இந்தூர் நகரில் உள்ள அரவிந்தோ மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தார்.
அப்போது, அவரது நுரையீரல் பரிசோதனையின் போது இந்த நோய் தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மருத்துவக்குழு, பச்சை பூஞ்சை பாதிக்கப்பட்ட நபரை மும்பை நகருக்கு சிகிச்சைக்காக விமானத்தில் அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்