"இந்த தடுப்பூசிதான்... முதல்ல வரப்போகுதுனு நினைச்சோம், ஆனா...?!!" 'இந்தியா போட்ட தடையால்'... 'ரஷ்ய தடுப்பூசிக்கு வந்த பின்னடைவு!!!'
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் எப்போது தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
உலகிலேயே முதல்முதலாக கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ஆகஸ்ட் மாதம் அறிவித்த ரஷ்யா அதற்கு ஸ்புட்னிக்-வி எனப் பெயரிட்டது. இதையடுத்து ரஷ்யாவின் இந்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் நடத்தவும், தடுப்பூசியை விநியோகிக்கவும் டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்டரீஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.
இதைத்தொடர்ந்து இந்தியாவில் பெரும் எண்ணிக்கையிலான ஆட்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை செலுத்தி மூன்றாம் கட்ட சோதனையை மேற்கொள்ள இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு துறையிடம் அந்த நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை பெரும் எண்ணிக்கையிலான ஆட்களுக்கு செலுத்தி பரிசோதிக்க இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு துறை அனுமதி மறுத்துள்ளது.
மேலும் இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை முதலில் குறைந்த எண்ணிக்கையிலான ஆட்களிடம் சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த நடவடிக்கையானது, பரிசோதனைகள் முழுவதுமாக முடிந்து கடுப்பூசியின் திறன் தெரியவரும் முன்பே அதை கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இந்தியா போன்ற நாட்டில் அனுமதி பெற்று, வெளியிடுவதற்கான ரஷ்யாவின் திட்டத்திற்கு ஒரு பின்னடைவாகியுள்ளது.
மற்ற செய்திகள்