‘ஒரு பக்கம் அதிகரித்தாலும்’... ‘கொரோனா பாதிப்பில்’... ‘கடந்த 3 நாட்களாக நடக்கும் அதிசயம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக அதிகரித்து வருவது இந்திய மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,387 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,000 பேர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக அதிகரித்து வருகிறது.
இந்த நோயை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி மீண்டவர்கள் எண்ணிக்கை வீதம் வெள்ளிக்கிழமை 13.06 ஆக உயர்ந்து உள்ளது. நேற்று வியாழக்கிழமை 12.02 மற்றும் புதன்கிழமை 11.41 ஆக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில், 260 நோயாளிகள் கொரோனா பாதிப்பில் இருந்து குணப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டு மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பினர். இது இந்தியாவில் இதுவரை மீட்கப்பட்ட மிகப்பெரிய எண்ணிக்கையாகும். வியாழக்கிழமை 183 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
“மே முதல் வாரத்தில் இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை உச்சத்தைத் தொடக்கூடும் என்றும், அதன் பிறகு இந்த எண்ணிக்கை குறையும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடுத்த ஒரு வாரம் மிக முக்கியமானது. இந்தியா அதன் பரிசோதனையை அதிகரிக்கப் போகிறது. கடுமையான சுவாச நோய்த்தொற்று தொடர்பான அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் சோதனை செய்யப்படும்" என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
➡️1749 people recovered so far (13.6% people recovered so far)
➡️13387 confirmed positive cases so far
➡️In last 24 hours, 1007 new cases & 23 deaths have been reported
➡️Our doubling rate of cases is 6.2 days as per the data of last 7 days : @MoHFW_INDIA pic.twitter.com/IfgelesW74
— #IndiaFightsCorona (@COVIDNewsByMIB) April 17, 2020