"சினிமா 'ஷூட்டிங்' எப்போ ஸ்டார்ட் பண்ணலாம்??"... 'மத்திய' அரசு வெளியிட்ட 'முக்கிய' நெறிமுறைகள்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கிப் போன நிலையில், சினிமா படப்பிடிப்பு நடைபெறவும் தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் சினிமா மற்றும் டிவி தொடர்களுக்கான படப்பிடிப்புக்கு அனுமதியளித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான தகவலை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார். மேலும், படப்பிடிப்புத் தளங்களில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார். படப்பிடிப்பின் போது நடிகர், நடிகை தவிர மற்ற அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உடை, உபகரணங்களை பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். உபகரணங்களை கையாளும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கட்டாயமாக கையுறை அணிய வேண்டும். அதே போல, படப்பிடிப்பு நடக்கும் தளத்தில் 6 அடிக்கு சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும், மிகக் குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்தில் பங்கேற்க வேண்டும். படிப்பில் பங்குபெறும் நபர்கள் அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும், எச்சில் துப்பக் கூடாது.
படப்பிடிப்பு தளங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது. வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடைபெறும் போது மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் உட்பட பல நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மற்ற செய்திகள்