ஆட்டோ ஓட்டுநர் மீது உருவான காதல்.. இந்திய மருமகளாக மாறிய பெல்ஜியம் பெண்.. அமர்க்களமாக நடந்த திருமணம்!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇரு மனதுக்கு இடையே உருவாகும் உன்னதமான காதல் உணர்வு என்பது பணம், அந்தஸ்து, மொழி, மதம் உள்ளிட்ட எந்த ஒரு விஷயங்களையும் பார்த்து வராது.
இரண்டு பேரும் சிறப்பாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இருந்தாலே, நிச்சயம் எந்தவொரு பாகுபாடையும் பார்க்காமல் காதல் உருவாகி விடும்.
அப்படி ஒரு சூழலில், கர்நாடகாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் மீது உருவான காதல் தொடர்பான் செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
கர்நாடக மாநிலம், விஜயநகர் மாவட்டத்தில் உள்ள ஹம்பி ஜனதா பிளாட் என்னும் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ். இவர் ஹம்பி பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருவதுடன் சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டியாகவும் பணிபுரிந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சமூக சேவகராக கெமில் என்ற பெண், தனது குடும்பத்தினருடன் ஹம்பிக்கு சுற்றுலா வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
அப்போது அவர்களுக்கு ஆனந்தராஜ், வழிகாட்டியாக இருந்ததுடன் ஆட்டோ ஓட்டுநராகவும் பயணித்துள்ளார். அந்த சமயத்தில், ஆனந்தராஜ் மற்றும் கெமில் ஆகியோருக்கு இடையே பழக்கமும் உருவானதாக கூறப்படுகிறது. நாளடைவில் ஒருவரை ஒருவர் காதலிக்கவும் தொடங்கி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இருவரின் வீட்டாருக்கும் இந்த காதல் விவகாரம் தெரிய வரவே, அவர்கள் திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ஆனந்தராஜ் மற்றும் கெமில் ஆகியோர் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்திருந்த நிலையில், கோவிட் பெருந்தொற்று காரணமாக திருமணமும் தடைபட்டுள்ளது.
முதலில் மகளின் திருமணத்தை பெல்ஜியம் நாட்டில் அமோகமாக நடந்த கெமில் பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், ஆனந்தராஜ் தரப்பில் இந்தியாவில் வைத்து நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவிக்கவே, கெமிலின் தந்தையும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, 4 ஆண்டுகள் காதலித்து வந்த ஆனந்தராஜ் - கெமில் ஜோடி, ஹம்பியில் உள்ள கோவிலில் இந்து முறைப்படி திருமணமும் செய்து கொண்டனர்.
மிகவும் கோலாகலமாக நடந்த இந்த திருமண நிகழ்வின் புகைப்படங்கள், தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வரும் நிலையில், பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்