'கொரோனா தடுப்பூசி'... 'மே 1ஆம் தேதி முதல் இந்த வயதுக்கு மேற்பட்டோர் போடலாம்'... மத்திய அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியாதற்போது 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில் வயது வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு முன்பாக 25 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் எனக் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், இரண்டாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 3ஆவது கட்டாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்