"இந்தியர் ஒவ்வொருத்தருக்கும் 'இவ்வளவு' செலவு ஆகும்!.. ஆனா, அதப்பத்தி கவலைப்படாதீங்க!".. கொரோனா தடுப்பூசி குறித்து மத்திய அரசு 'அதிரடி' அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய இணையமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள பீகாரில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் என்ற பாஜகவின் தேர்தல் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து, தமிழகம், மத்திய பிரதேசம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய அரசாங்கங்கள், தங்கள் மாநில மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தன.
இதற்கிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய கால்நடை, மீன்வளத்துறை இணையமைச்சர் பிரதாப் சாரங்கி, அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருப்பதாகவும், இதற்காக நபர் ஒருவருக்கு 500 ரூபாய் வீதம் செலவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்