கொரோனா இருந்ததால '80 பேரை' விட்டுட்டு வந்துட்டோம்... 'பாகிஸ்தான்' பசங்க நம்ம 'பிளைட்ல' ஏற மாட்டேன்னு சொல்லிட்டாங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாசீனாவின் வுகான் நகரில் இருந்து கடந்த வாரம் இந்தியாவை சேர்ந்த 645 பேரை மத்திய அரசு தனி விமானம் வழியாக அழைத்து வந்தது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தட்டு தற்போது தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கின்றனர். மேலும் அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? என்று பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனையில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட 645 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் சீனாவில் இருக்கும் பாகிஸ்தான் மாணவர்கள் தங்களை மீட்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் பாகிஸ்தான் நாட்டுடனான தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அவர்களை மீட்க மாட்டோம் என அந்நாட்டு அரசு தெரிவித்து இருக்கிறது. இந்த நிலையில், பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது வுகானில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்பட்ட போது பாகிஸ்தான் மாணவர்களையும் மீட்க நாம் முன்வந்தோமா? என பாஜக உறுப்பினர் ரூபா கங்குலி கேள்வி எழுப்பினார்.
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், '' அண்டை நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கும் நாம் உதவ முன்வந்தோம். ஆனால் மாலத்தீவை சேர்ந்த 7 பேர் மட்டுமே நம்முடைய உதவியை ஏற்றனர். அதன் அடிப்படையில் அவர்களை அழைத்து வந்தோம். இன்னும் நம்முடைய நாட்டை சேர்ந்த 80 பேர் சீனாவில் உள்ளனர். அவர்களில் 70 பேர் தாங்கள் அங்கேயே தங்கிக்கொள்வதாக தெரிவித்தனர். மீதமுள்ள 10 பேர் விமானத்தில் ஏற முன்வருகையில், அவர்களுக்கு காய்ச்சல் இருந்ததால் அவர்களை சீன அதிகாரிகள் விமானத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கவில்லை,'' என தெரிவித்தார்.