Kochi : ஓடும் காருக்குள் கேரள இளம் மாடலுக்கு நேர்ந்த கொடூரம்.. தோழி உட்பட 4 ஆண்கள் கைது.! தென்னிந்தியாவை உலுக்கிய சம்பவம்.
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா மாநிலம், காசர்கோடு பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் மாடலிங் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் இவர் காக்கநாடு என்னும் பகுதியில் தங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் இவர் தங்கி இருந்த வீட்டின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது. இதன் பின்னர், அவரது வீட்டில் சென்று விசாரித்த போது அங்கே உடல் முழுவதும் காயங்களுடன் அந்த இளம்பெண் மயங்கி கிடந்ததாகவும் சொல்லபடுகிறது. இதன் பின்னர்,அவரை மருத்துவமனையில் சேர்த்த பிறகு போலீஸ் நிலையத்திலும் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணைக்கு மேற்கொண்டு வந்த நிலையில், பல்வேறு அதிர்ச்சி தகவல்களும் வெளியானது. கொச்சி காக்கநாடு பகுதியில் மாடலிங் செய்து வரும் அந்த இளம்பெண்ணுக்கு ராஜஸ்தான் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தோழியாக இருந்து வந்தது தெரிய வந்துள்ளது. இவர்கள் இருவரும் நல்ல நட்புடன் இருந்தவர்கள் என்ற சூழலில் இந்த பெண் மாடலை கொச்சியில் உள்ள பாரில் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார் அந்த ராஜஸ்தான் தோழி.
அங்கே அந்த ராஜஸ்தான் தோழியின் 3 ஆண் நண்பர்களும் வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போது இந்த மாடல் பெண்ணுக்கு 3 ஆண்களும் அறிமுகமாகி உள்ளார்கள். மேலும் எல்லோரும் சேர்ந்து அங்கே மது அருந்தியதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த இளம் பெண்ணை அவரது வீட்டிற்கு கொண்டு விடுவதாக சொல்லி, அந்த 3 ஆண் நண்பர்களும் காரில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
மறுபக்கம், அந்த ராஜஸ்தான் தோழி மட்டும் ஓட்டலிலேயே இருந்துள்ளார். இதனையடுத்துதான் ஒரு திடுக்கிடும் சம்பவம் அங்கே அரங்கேறி உள்ளதாக கூறப்படுகிறது. ஆம், அந்த 3 இளைஞர்களும் இளம்பெண்ணிடம் மாறி மாறி அத்துமீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலும், இரவில் அதிக நேரம் பல இடங்களில் சுற்றி இந்த இளம்பெண்ணை அவர்கள் துன்புறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் மீண்டும் ஓட்டலுக்கு சென்று, அந்த ராஜஸ்தான் பெண்ணிடம் ஒப்படைக்க, அவர் இந்த இளம் பெண்ணை அவரின் வீட்டில் விட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இப்படி ஒரு சூழலில் தான், இந்த இளம்பெண்ணின் நிலை குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இதை விசாரித்த பின்பே இந்த திடுக்கிடும் பின்னணி தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இளம்பெண் சொன்ன தகவலின் அடிப்படையில் அவரை கடத்தி சென்ற காரை சிசிடிவி மூலம் கண்காணித்த போலீசார், மூன்று இளைஞர்கள் மற்றும் ராஜஸ்தான் தோழியையும் கைது செய்து அவர்களிடம் இதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜஸ்தான் பெண் வேண்டுமென்றே திட்டமிட்டு அவரது தோழியை இதில் உட்படுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த விவகாரம், தென் இந்தியாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்