'6 அடி உயரம் இருக்கும்...' 'ஆவியா...? இல்ல ப்ளேக் மேனா..?' 'லாக்டவுன் இரவில்...' மின்னல் வேகத்தில் உலாவும் உருவம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் ஊரடங்கு உத்தரவில் இரவு நேரங்களில் 6 அடி உயரமுள்ள உருவம் மின்னல் வேகத்தில் உலவுவதாக கேரள மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவி வரும் சூழலில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நடவடிக்கைகளில் மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்ற பாராட்டை பெற்றுள்ளது கேரளம். இதற்கு முக்கிய காரணம் மக்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு இடத்திற்கு மக்கள் செல்லாதவாறு அவர்களுக்குள் சாலையை மறித்து பாதுகாப்பான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரள மாநிலம், திருச்சூரில் இரவில் தீடீரென ஆறடி உயரத்திற்கு ஒரு உருவம் மின்னல் வேகத்தில் தெருவில் வலம் வருவதாக மக்கள் கூறியுள்ளனர். ஒரு சிலர் இது கண்டிப்பாக பிளேக் மேன் அல்லது ஆவியாக இருக்கலாம் என அச்சத்தில் கூறி வருகின்றனர்.
மேலும் ஒரு சிலர் இரவு நேரங்களில் இது வீட்டை தட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த உருவத்தால் இதுவரை எந்தவித அபாயமும் ஏற்படவில்லை எனவும் கூறுகின்றனர்.
அதனை அறிந்த போலீசார், இந்த உருவம் வலம்வருவதாக கூறப்படும் இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் அச்சத்தை போக்கும் வகையில் போலீசாரின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது.
இந்த மர்ம உருவத்தை பார்ப்பதற்கு இரவு நேரங்களில் யாரும் லாக் டவுனை மீறி வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அரசு கண்டிப்பாக எச்சரித்துள்ளது. மேலும் இம்மாதிரியான உருவம் உலவுவதை பார்த்தால் உடனடியாக காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவும் உதவி எண்ணையும் அளித்துள்ளது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்ததில் கொரோனா பரவும் இந்த சூழலில் யாரோ மக்களை மேலும் அச்சப்படுத்த இதுபோல் நடந்து கொள்வதால், தற்போதைக்கு காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடாது என்று தெரிவித்துள்ளது.