''எங்களுக்கு தனி வரிசை வேண்டும்...'' 'சம உரிமையை நிலைநாட்டிய பெண்கள்...' 'காய்கறிக் கூடையுடன்' களத்தில் இறங்கிய 'மகளிர்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகர்நாடகாவில் மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, பெங்களூருவில் மதுக்கடைகளுக்கு முன்பாக குவிந்த பெண்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. .
கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு மே 17 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. மாநில வருவாய்க்காக மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாநிலமாக மதுக்கடைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நிபந்தனைகளுடன் வரும் 7ம் தேதி முதல் டாஸ்மாக் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் மதுபான கடைகள் இன்று திறக்கப்பட்டன. இதனால், மதுப்பிரியர்கள் கடைகள் முன்பு குவிந்தனர். இதில் பெங்களூருவில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் குவிந்ததால், அவர்களுக்கென தனி வரிசை ஏற்படுத்தப்பட்டது. காய்கறிக் கூடைகளுடனும், வேலைக்குச் செல்வது போன்றும் வரிசையில் திரண்ட ஏராளமான பெண்கள் மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.