'விமான' நிலையங்களையும் ஆக்கிரமித்த நோய் 'எதிர்ப்பு' சக்தி உணவுகள்... டெல்லிக்கு 'மஞ்சள்' பால் அப்போ சென்னைக்கு?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா காரணமாக விமான நிலையங்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் ஆக்கிரமித்து இருக்கின்றன. இதுவரை காபி, டீ அதிகம் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது அந்த நிலை முற்றிலும் மாறிவிட்டது. முன்பு பஃபே முறையில் பயணிகளுக்கு உணவு வழங்கி வந்தனர். அதற்கு பதிலாக தற்போது பார்சல் உணவை வழங்குகின்றனர்.

'விமான' நிலையங்களையும் ஆக்கிரமித்த நோய் 'எதிர்ப்பு' சக்தி உணவுகள்... டெல்லிக்கு 'மஞ்சள்' பால் அப்போ சென்னைக்கு?

இதுபோல டெல்லி கடைகளில் அதிகம் விற்பனை செய்யப்படும் பானமாக மஞ்சள் பால் உள்ளது. கொல்கத்தாவில் துளசி-புதினா சாறும், சென்னையில் ரசமும் அதிகளவில் விற்பனை ஆகின்றன. உணவை பொறுத்தவரை தயிர் சாதம் அதிகளவில் விற்பனை ஆகிறதாம். கொரோனாவுக்கு பின் தயிர் சாதத்தின் விற்பனை 15%-20% அதிகரித்து உள்ளது.

அதே நேரம் அசைவ உணவுகள் விற்பனை மிகவும் குறைந்து விட்டதாக கூறப்படுகிறது. கொரோனா காரணமாக அசைவ உணவை வாங்கி உண்ண மக்கள் தயங்குகின்றனராம். அதேபோல பணம் கொடுத்து வாங்குவதற்கு பதிலாக ஆன்லைனில் பணம் கட்டியே மக்கள் உணவுகளை வாங்கி உண்கின்றனராம்.

மற்ற செய்திகள்