'உருவானது 'நிசார்கா' புயல்...' 'இந்த மாதிரி புயல் உருவாகி 130 வருஷம் ஆச்சு...' இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வாளர் தகவல்...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் மீண்டும் உருவானது 'நிசார்கா' புயல் அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த புயல் வரும் 3-ம் தேதி மகாராஷ்டிரா - குஜராத் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'உருவானது 'நிசார்கா' புயல்...' 'இந்த மாதிரி புயல் உருவாகி 130 வருஷம் ஆச்சு...' இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வாளர் தகவல்...

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவை 'ஆம்பன்' புயல் தாக்கியது. 2020 ஆண்டு பிறந்ததில் இருந்து இந்தியா எதிர்கொள்ள இருக்கும் இரண்டாவது புயல் இது எனலாம்.

அரபிக்கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து சூறாவளி ஆக மாறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் உருவாகி வரும் இந்த புயலுக்கு நிசார்கா (Nisarga) எனப் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் வரும் ஜூன் 3-ம் தேதி பிற்பகல், மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு மத்தியில் கரையைக் கடக்கும் எனக் கூறியுள்ளது இந்திய வானிலை மையம்.

தற்போது நிசார்கா புயல், மும்பையில் இருந்து சுமார் 700 கி.மீ தொலைவில் இருப்பதாகவும், ஜூன் 3 -ம் தேதி கரையைக் கடக்கும்போது, மகாராஷ்டிராவில் 105 - 110 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், இதன் காரணமாக நாளை முதல் மாநிலத்தின் பல பகுதிகளில் கன மழை இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மீனவர்கள், அடுத்த சில நாள்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.

இந்த புயல் மகாராஷ்டிராவைக் கடக்கும்போது, மும்பையிலும் சற்று தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பையைத் தவிர தானே, கல்யாண் டோம்பிவ்லி, வசாய் விரார், நவி மும்பை, மீரா பயந்தர், பத்லாப்பூர், அம்பர்நாத், பன்வெல் போன்ற நகரங்களிலும் பாதிப்பு ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.

'மகாராஷ்டிரா மற்றும் மும்பையை 1891-ம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஜூன் மாத வெப்பமண்டலப் புயலும் தாக்கவில்லை. 1948 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் இரண்டு வெப்பமண்டல புயல்கள் மும்பையை நெருங்கி வந்த அவை சூறாவளியாக மாறவில்லை' என ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திடம் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் வானிலை ஆய்வாளர் அக்‌ஷய் தியோரஸ் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்