‘வாட்டி வதைக்கும் கடும் குளிர்’... ‘71 ஆண்டுகளுக்குப் பின்னர்’... ‘நவம்பர் மாதத்தில் திரும்பிய வரலாறு’... ‘இந்திய வானிலை மையம் தகவல்’...!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கடந்த 71 ஆண்டுகளில் இல்லாத வகையில் டெல்லியில் வரலாறு காணாத கடும் குளிர் நிலவுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

‘வாட்டி வதைக்கும் கடும் குளிர்’... ‘71 ஆண்டுகளுக்குப் பின்னர்’... ‘நவம்பர் மாதத்தில் திரும்பிய வரலாறு’... ‘இந்திய வானிலை மையம் தகவல்’...!!!

டெல்லியில் கடந்த 1949-ம் ஆண்டு நவம்பரில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில் சுமார் 71 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அதே வெப்பநிலை பதிவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக டெல்லியில் நவம்பரில் சராசரியாக 12.9 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகி வந்தது. இதற்கு முன்னர் 1938-ல் 9.6 டிகிரியும், 1931-ல் 9 டிகிரியும், 1930-ல் 8.9 டிகிரியும் பதிவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பநிலை குறைந்ததால், டெல்லியில் கடந்த 3,20, 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் கடும் குளிர் அலை வீசியது. டெல்லியின் ஒவ்வொரு வருடமும் நவம்பர் டிசம்பர் மாதங்களில் கடும் குளிர் இருக்கும் என்றாலும் இந்த அளவுக்கு குறைவான வெப்பநிலை இருந்தது இல்லை என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

டெல்லியில் தற்போது இரவு பகலாக விவசாயிகள் வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், இந்த கடும் குளிரால் போராட்டம் பாதிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எனினும், தொடர்ந்து வேளாண் மசோதாவுக்கு எதிராக போரோடுவோம் என்று விவசாயிகள் கூறி வருவதால், அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழகத்திலும் நிவர் புயல் கரையை கடந்தப் பின்னர், குளிர் வாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்