“நான் இன்னும் பெரியாரிஸ்ட்தான்!”.. “அப்படி பாத்தா தமிழ்நாட்டுல எந்த கட்சியும் பெரியார் பத்தி பேச கூடாது!” - குஷ்பு பதில்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

“நான் இன்னும் பெரியாரிஸ்ட்தான்!”.. “அப்படி பாத்தா தமிழ்நாட்டுல எந்த கட்சியும் பெரியார் பத்தி பேச கூடாது!” - குஷ்பு பதில்கள்!

அண்மையில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் தம்மை இணைத்துக் கொண்ட நடிகை குஷ்பு இந்திய அளவில் பேசப்பட்டு வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில், தான் ஒடுக்கப்படுவதாக குறிப்பிட்டிருந்த குஷ்பு பாஜக ஊழலற்ற கட்சியாக இருப்பதாகவும் எது நாட்டுக்கு நல்லது என்று தற்போது தனக்கு தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு பல்வேறு கருத்துக்களை பேசியுள்ளார்.

அதில், “நான் இன்னும் பெரியாரிஸ்ட் தான். பெரியார் யார் என்றால் பெண்களுக்காக குரல் கொடுத்தவர். நானும் பெண்களுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்துள்ளேன். பெண்களுடைய நன்மைக்காக குரல் கொடுத்த பெரியாரின் ஒவ்வொரு கொள்கைக்கும் நாம் நாம் தலையாட்டிக் கொண்டு போக முடியாது. பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கும் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கும் அவர் குரல் கொடுத்தார். பாஜகவில் இதே தானே செய்கிறார்கள்? தலித் மக்களுக்கு நல்லது செய்வதையும் பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்கு இருக்கக்கூடாது என்பதற்காக தானே பாடுபடுகிறார்கள்?” என்று கேட்டுள்ளார்

மேலும் “ஆனால் கொள்கை அளவில் பெரியாருக்கும் மற்ற கட்சிகளுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக கருதினால் அரசியலில் யாருமே பெரியாரைப் பற்றி பேச முடியாது. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பெரியார் அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி போனவர் ஆயிற்றே! அப்படிப் பார்த்தால் தமிழ்நாட்டில் எந்த மேடையிலும் எந்தக் கட்சிக் காரர்களும் பெரியாரைப் பற்றி பேசக்கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்