"மோடியும் அம்பேத்கரும்".. இளையராஜா முன்னுரை எழுதிய புத்தகம்.. வெளியீட்டு விழாவுக்கு வந்த அழைப்பு! எங்க ?? எப்போ ??
முகப்பு > செய்திகள் > இந்தியா'மோடியும் அம்பேத்கரும்' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் விருந்தினராக பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா கலந்து கொள்ளவுள்ளார்.
Also Read | அம்மா மாதிரி இருக்கு.. கோவையில் பஸ் பின்னாடியே ஓடுன குட்டிக்குதிரை.. கண்கலங்க வெச்ச சம்பவம்..
பல ஆயிரக்கணக்கான பாடல்கள் மூலம் ஏராளமான இசை ரசிகர்களை தன் வசம் கட்டிப் போட்டவர் இசைஞானி இளையராஜா.
பல ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா இசையமைத்த பாடல்கள், இன்றைய காலகட்டத்திலும் ஏராளமான இசை ரசிகர்களின் பிளே லிஸ்ட்டை ஆக்கிரமித்து அவர்களை மதி மயக்கச் செய்யும் வகையிலும் இருந்து வருகிறது.
பல்வேறு விருதுகளையும் தன்னுடைய இசை மூலம் வென்றுள்ள இளையராஜா, கடந்த ஜூலை மாதம் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் தான், புத்தக வெளியீட்டு ஒன்றின் விருந்தினராக இளையராஜா கலந்து கொள்ள உள்ளார்.
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம் சார்பில் எழுதபட்டுள்ள புத்தகம் தான், 'Ambedkar and Modi' (அம்பேத்கரும் மோடியும்)- Reformer's Ideas, Performer's Implementation.
பிரபாத் பிரகாஷன் பப்ளிஷ் செய்துள்ள இந்த புத்தகத்தின் முன்னுரையை இளையராஜா தான் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு சார்பில் வெளியிடப்படும் அம்பேத்கரும், மோடியும் புத்தகத்தின் வெளியீட்டு விழா, செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளது.
டெல்லியில் அமைந்துள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தில் வைத்து இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், தலைமை விருந்தினராக முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் கலந்து கொள்ள உள்ளார். இது தவிர முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், இசையமைப்பாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரான இளையராஜா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.
இது தொடர்பான அறிவிப்பை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்