‘ஐஐடியில் படித்துவிட்டு இளைஞர் செய்யும் வேலை’.. ‘அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய காரணம்..!’
முகப்பு > செய்திகள் > இந்தியாஐஐடியில் படித்து முடித்துள்ள இளைஞர் ஒருவர் ரயில்வே தேர்வு எழுதி டிராக்மேன் வேலையில் சேர்ந்துள்ளது அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷ்ரவன் குமார் என்ற இளைஞர் மும்பை ஐஐடியில் பி.டெக் மற்றும் எம்.டெக் படித்துள்ளார். படிப்பை முடித்தது முதல் கடந்த 4 ஆண்டுகளாக அரசுப் பணிக்காக தயாராகி வந்த ஷ்ரவன் குமாரை அவருடைய நண்பர்கள் பலரும் படித்த துறையில் வேலைக்கு முயற்சிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால் அவர் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் ஷ்ரவன் குமார் சமீபத்தில் ரயில்வே துறைக்கான ஆர்.ஆர்.பி தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு ரயில்வே துறையில் டி பிரிவில் வேலை கிடைத்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் ரயில்வே டிவிஷனில் அவர் ட்ராக் மேனாக வேலைக்கு சேர்ந்துள்ளார்.
10ஆம் வகுப்பு மட்டுமே தகுதியாக உள்ள ஒரு வேலைக்கு ஐஐடியில் படித்த ஒருவர் தேர்வு எழுதி வந்திருப்பது அவரது உயரதிகாரிகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ஷ்ரவன் குமார், “தான் அரசு வேலைக்கு வந்ததற்கு பணி உத்தரவாதம்தான் காரணம்” எனக் கூறியுள்ளார்.