VIDEO: 90's கிட்ஸ்-க்கு மட்டும் தான் இதெல்லாம் அமையுது!.. எப்படி அசத்தி இருக்காங்கனு பாருங்க!.. கல்லூரி நிர்வாகம் சர்ப்ரைஸ்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மும்பையில் உள்ள ஐஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 3டி வடிவிலான பட்டமளிப்பு விழா அனைவரையும் கவர்ந்துள்ளது.

VIDEO: 90's கிட்ஸ்-க்கு மட்டும் தான் இதெல்லாம் அமையுது!.. எப்படி அசத்தி இருக்காங்கனு பாருங்க!.. கல்லூரி நிர்வாகம் சர்ப்ரைஸ்!

கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவானது ஆன்லைனில் வீடியோ வழியாக நடைபெறுகிறது. இதனால் மாணவர்கள், தங்கள் வாழ்கையில் ஒரு முறை மட்டுமே வரக் கூடிய அந்த நாளின் சிறப்பான தருணங்களை மாணவர்கள் இழந்து வந்தனர்.

ஆனால், தங்களது மாணவர்களை அத்தகைய சூழ்நிலைக்கு தள்ள விரும்பாத மும்பை ஐஐடி பல்கலைக்கழகம், மாணவர்களை கல்லூரிக்கே வரவழைத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கை ஒன்றை கூட கடைபிடிக்காமல் பட்டமளிப்பு விழாவை அரங்கேற்றியுள்ளது.

அது எப்படி சாத்தியம் என்று கேட்கிறீர்களா? அதை 3டி என்ற தொழிட்நுட்பத்தின் மூலம் சாத்தியப்படுத்தியிருக்கிறது கல்லூரி நிர்வாகம். பட்டம் வாங்கும் மாணவர்களை தொழில்நுட்பத்தின் உதவியுடன் 3டி வடிவ பொம்மைகளாக வடிவமைத்து, அதனை மாணவர்கள் இயக்குவது போன்று உருவாக்கியிருக்கிறார்கள். இதனால் மாணவர்கள் எப்போதும் போல மேடையேறி தங்களுக்கான பட்டங்களை வாங்கிச்சென்றனர்.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக 2016 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற டங்கன் ஹால்டேன் மற்றும் பிளாக்ஸ்டோன் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீபன் ஸ்வார்ஸ்மேன் ஆகியோர் 3டி வடிவ பொம்மைகளாக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

இந்த ஆன்லைன் 3டி லைவ்வை 20 நபர்கள் கொண்ட குழு பொறுப்பெடுத்து வடிவமைத்திருக்கிறது. அது மட்டுமன்றி, ஆன்லைன் மூலம் கல்லூரியை சுற்றிப்பார்க்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இது குறித்து கணினித்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, குடியரசுத் தலைவர் விருதைப் பெற்ற சாஹில் ஷா டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்குப் பேசினார். அதில் அவர் கூறும் போது, "அவர்கள் உருவாக்கிய ஆப்பின் மூலம் எங்களது 3டி வடிவம் அதனுடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம் ஆப்பில் வரையறுக்கப்பட்டிருந்த தொலைவில் உள்ளவர்கள், அதில் வீடியோ கால் மூலம் இணைந்து கொள்ள முடிந்தது.

கடந்த சனிக்கிழமை அதற்கான அனுமதியை கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு அளித்தது. அதன் மூலம், எங்களால் கல்லூரியையும் சுற்றிப்பார்க்க முடிந்தது. என்னுடன் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்" என்றார்.

 

 

 

மற்ற செய்திகள்