"நான் பல போட்டோஷாப்-அ பாத்திருக்கேன்..ஆனா இது என்னையே ஷாக்-ஆக வச்சிடுச்சு"..IFS அதிகாரி பகிர்ந்த வீடியோ.. நடுங்கிப்போன நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாIFS அதிகாரி பகிர்ந்த பிரம்மாண்ட மலைப்பாம்பின் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும், இது பல கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் எனச் சொல்வதுண்டு. பொதுவாகவே பாம்புகளை பார்த்தவுடன் பலருக்கும் அவர்களை அறியாமலேயே பயம் ஏற்பட்டுவிடும். இந்த அச்சமே பாம்புகள் பற்றிய செய்திகளை சுவாரஸ்யமாக்கிவிடுகின்றன. இணையம் வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் இதுபோன்ற வீடியோக்களை பலரும் விரும்பி பார்க்கின்றனர். சொல்லப்போனால் பலரும் இதுமாதிரியான வீடியோக்களை அதிகம் ஷேர் செய்கின்றனர். அந்த வகையில் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ பலரையும் திகைப்படைய வைத்திருக்கிறது.
வைரல் வீடியோ
இந்த வீடியோவில் ஒரு வீட்டின் முன்பக்கத்தில் பிரம்மாண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்கிறது. பக்கவாட்டில் உள்ள சுவரின் மேலே சென்று உள்ளே வாசற்படி வரையும் நீண்டிருக்கிறது இந்த பாம்பு. இதனை மிகவும் அருகில் இருந்து ஒருவர் வீடியோ எடுத்திருக்கிறார். சுவற்றுக்கு வெளியே பாம்பின் பாதி பகுதி தெரியவே, வீடியோ எடுத்தவர் வீட்டுக்குள் இருக்கும் பாம்பின் தலைப் பகுதியையும் பதிவு செய்ய, அதன் நீளத்தை பார்த்து நெட்டிசன்கள் பலரும் வாயடைத்துப் போயிருக்கிறார்கள்.
ஷாக் ஆகிட்டேன்
இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வழக்கமாக காடுகள் மற்றும் வன உயிரினங்கள் பற்றிய விழிப்புணர்வு பதிவுகளை இவர் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தற்போது பதிவிட்டுள்ள இந்த வீடியோ பலரையும் திடுக்கிட செய்திருக்கிறது.
இந்த வீடியோவில்,"நான் பல போட்டோஷாப்-களை பார்த்திருக்கிறேன். ஆனால், இது என்னையே ஷாக் ஆக வைத்துவிட்டது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், escribano என்பவரது பக்கத்தில் இருந்து இந்த வீடியோவை பகிர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
உண்மையா?
இந்த வீடியோ எங்கே? யாரால்? எடுக்கப்பட்டது என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேபோல, இந்த பாம்பின் நீளம் குறித்த அளவீடும் தெரிவிக்கப்படவில்லை. இந்த வீடியோவை இதுவரையில் 55 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். மேலும், இது போட்டோஷாப் செய்யப்பட்டதா? இல்லை உண்மையாகவே இவ்வளவு நீளத்திற்கு பாம்பு இருக்கிறதா?" என்றும் "இது அனகோண்டாவாக இருக்கலாம்" என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
I had seen many photo shopped videos…
But this was a photo shocked one to me 😳
Via Escribano pic.twitter.com/y6E0uTIAfx
— Susanta Nanda IFS (@susantananda3) July 11, 2022
மற்ற செய்திகள்