யாரெல்லாம் 'அந்த வாக்சின்' போட்டீங்க...? 'ஃபர்ஸ்ட் டோஸே தாறுமாறு...' கொரோனாவே வந்தாலும் 'கில்லி' மாதிரி கெத்து காட்டுது...! - ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா வைரஸிற்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளின் செயல் திறன் குறித்த ஆய்வுகளை ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த இரு தடுப்பூசிகள் முதல் மற்றும் இரண்டாம் டோஸ் போட்டுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளும் அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், 'கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வில், கொரோனாவால் பாதிக்கப்படாமல் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது.
தற்போது செய்யப்பட்ட இந்த முதல் கட்ட பரிசோதனை அதிகமானவர்களுக்கு செய்ய வேண்டும். அதில் இந்த முடிவுகள் உறுதி செய்யப்படும். அவ்வாறு உறுதி செய்யப்பட்டால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தினாலே போதுமானதாகி விடும்' என கூறப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்