'எங்க கையில எதுவும் இல்ல... அவங்க தான் முடிவு செய்யணும்'!... தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்?.. ஐசிஎம்ஆர் 'பரபரப்பு' கருத்து!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்து உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு அரசு தான் ஆவண செய்ய முடியும் என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

'எங்க கையில எதுவும் இல்ல... அவங்க தான் முடிவு செய்யணும்'!... தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும்?.. ஐசிஎம்ஆர் 'பரபரப்பு' கருத்து!

இந்தியாவில் 3 கொரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வுக் கட்டத்தில் உள்ளன. ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு கட்டத்தில் இருப்பதால், இந்தியர்களுக்கு தடுப்பு மருந்து எப்போது கிடைக்கும் என்ற கேள்வி தொடர்ந்து வருகிறது.

இதையடுத்து, நாடாளுமன்ற நிலுவைக்குழு முன் ஆஜரான ஐசிஎம்ஆர்-இன் இயக்குனர் அதிகாரி பல்ராம், "முழுக்க முழுக்க இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் 2 கொரோனா தடுப்பு மருந்துகள், மனித பரிசோதனைக் கட்டத்தில் இருக்கின்றன. அவற்றின் இறுதிக்கட்ட பரிசோதனைகள் முடிவதற்கு 6-9 மாதங்கள் ஆகும். உடனடியாக அவை தேவைப்படும் பட்சத்தில், மத்திய அரசு மட்டுமே அதனை 'அவசர' நிலையில் அங்கீகரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும்" என்று கூறியுள்ளார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சீரம் நிறுவனம் தயாரிக்கும் Covishield கொரோனா தடுப்பு மருந்து, 2ம் கட்ட மனித பரிசோதனைகளில் உள்ளது.

இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் Covaxin தடுப்பு மருந்து, இந்த வாரத்தில் 3ம் கட்ட மனித பரிசோதனைக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்