தமிழகத்தில் 'கோவேக்ஸின்' (COVAXIN) பரிசோதனை வெற்றிகரமாக தொடங்கியது!.. ICMR-இன் அடுத்தடுத்த 'அதிரடி' திட்டங்கள்!.. பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் முதல் கொரோனா தடுப்பு மருந்தான 'கோவேக்ஸின்' (COVAXIN) பரிசோதனை தமிழகத்தில் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில், உலக நாடுகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்துகளுள் 'கோவேக்ஸின்' முன்னிலையில் இருந்து வருகிறது. இந்தியாவின் பல்வேறு இடங்களில், இந்த மருந்தை மனிதர்களிடம் செலுத்தி பரிசோதனை செய்யப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் இன்று பரிசோதனை தொடங்கியுள்ளது. இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட 100 தன்னார்வலர்களிடம் 'கோவேக்ஸின்' மருந்து சோதனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து பேசிய மருத்துவமனை நிர்வாகம், "ஐசிஎம்ஆர்-இன் வழிகாட்டுதலின்படி, தன்னார்வலர்களை 2 குழுக்களாக பிரித்து, கோவேக்ஸின் மருந்து பரிசோதிக்கப்படுகிறது. முதல் டோஸுக்கு (dose) உடல் எவ்வாறு வினையாற்றுகிறது, என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன போன்றவற்றை அறிந்து, அடுத்த கட்டத்துக்கான முன்னெடுப்புகளை செய்ய உள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த பரிசோதனையானது ஒரு மாதம் முழுவதும் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ICMR-க்கு அனுப்பி வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்