"எது சூச்சின் டெண்டுல்கரா?..." "யாருப்பா அது... யாருக்காவது தெரியுமா?..." 'ஐ.சி.சி'. கிண்டல் செய்து 'வீடியோ' வெளியீடு...

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் பெயரை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உச்சரித்ததை ஐசிசி கேலி செய்து வீடியோ வெளியிட்டுள்ளது.

"எது சூச்சின் டெண்டுல்கரா?..." "யாருப்பா அது... யாருக்காவது தெரியுமா?..." 'ஐ.சி.சி'. கிண்டல் செய்து 'வீடியோ' வெளியீடு...

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள மொடேரா மைதானத்தில் நடைபெற்ற 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய டிரம்ப், இந்திய கிரிக்கெட் லெஜண்ட்டுகளான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகியோரை குறிப்பிட்டு பெருமிதத்துடன் பேசினார். அப்போது சச்சின் பெயரை குறிப்பிடும்போது  “சூ-சின் டெண்டுல்கர் என்று உச்சரித்தார்.

“பெரிய கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் முதல் விராட் கோலி வரை அனைவரையும் உற்சாகப்படுத்தும் நாடு இது,” என்று டிரம்ப் நிகழ்ச்சியில் கூறினார்.

டிரம்ப், இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை குறிப்பிட்டதும், மோடேரா மைதானத்தில் இருந்த கூட்டம் சந்தோஷத்தில் கோஷமிடத் தொடங்கினர். பிரதமர் நரேந்திர மோடியும், கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை சொன்னவுடன் புன்னகைத்தார்.

ட்ரம்பின் இந்த தவறான உச்சரிப்பை கிண்டல் செய்து ஐசிசி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தங்கள் அதிகாரப்பூர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் பெயரை சூ-சின் டெண்டுல்கர் என மாற்றுவது போல் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த வீடியோவுக்கு மேல், “சச், சுச், சாட்ச், சட்ச், சூச்- யாருகாவது தெரியுமா?” என்று தலைப்பிட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு கீழ் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

 

SACHIN TENDULKAR, DONALD TRUMP, MOTERA, NARENDRA MODI, ICC