'ஐ.டி. ஊழியர்கள் ஜாக்கிரதை...' 'பணி நீக்க' அறிவிப்பை வெளியிட்ட 'நிறுவனம்...' 'எத்தனை பேர் நீக்கப்படுவார்கள்?...' 'வெளியேற்றப்படப் போவது யார்...?'
முகப்பு > செய்திகள் > இந்தியாசெலவைக் குறைக்கும் நோக்கத்தில் ஊழியர்கள் பலரை வேலையை விட்டு நீக்க உள்ளதாக ஐபிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம், இந்தியாவிலும் தனது கிளையை வைத்துள்ளது. உலகின் அனைத்து நாடுகளிலும் தற்போது கொரோனா பாதிப்புகள் நிலவும் சூழலில் ஐபிஎம் நிறுவனத்தின் வருவாய் குறைந்து செலவுகள் அதிகரித்துள்ளன.
இதனால் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக ஆட்குறைப்பு நடவடிக்கை என்ற முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு ஐ,டி நிறுவனங்கள் சம்பளத்தை பாதியாக குறைத்தல், பணி நீக்க நடவடிக்கை என மேற்கொண்டு வருகின்றன.
இதுபோன்ற சூழலில் ஐபிஎம் நிறுவனத்தில் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் இந்நிறுவனம் ஏற்கெனவே ஊழியர்கள் பணிநீக்கம் செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெனிசில்வேனியா, கலிபோர்னியா, மிச்சூரி மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎம் ஊழியர்கள் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மிகவும் போட்டி நிறைந்த சவாலான சந்தையில் நிறுவனத்தை நிலையாக வைத்துக்கொள்ள இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட உலகின் மற்ற நாடுகளிலும் பணிநீக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் எத்தனை பேர் நீக்கப்படுவார்கள் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
மற்ற செய்திகள்