‘திறமையானவர்களை உருவாக்க’... ‘பிரபல ஐடி நிறுவனம்’... ‘எடுத்துள்ள அதிரடி திட்டம்’... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிறமையான மாணவர்களை உருவாக்க, மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்துடன் இணைந்து, பிரபல டி நிறுவனமான ஐபிஎம் புதிய திட்டத்தை கொண்டுவருகிறது.
மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் விதமாகவும், அடுத்த தலைமுறை உலகப் பொருளாதாரத்தை எதிர்த்துப் போட்டியிட உதவும் வகையிலும், ஸ்கில்ஸ் பில்ட் (Skills Build) என்ற திட்டத்தை ஐடி நிறுவனமான ஐபிஎம் தொடங்கியுள்ளது. இதன்படி, ஐ.டி.ஐ.(ITI) மற்றும் என்எஸ்டிஐ (NSTI) -க்களில், 2 ஆண்டுகள் நவீன டிப்ளமோ படிப்பை கொண்டுவருகிறது.
அதில் தகவல் தொழில்நுட்பம் (IT), நெட்வொர்க்கிங்(Networking), கிளவுட் கம்ப்யூட்டிங்(Cloud Computing) ஆகிய பிரிவுகளில் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கு மட்டுமல்லாது, ஐடிஐ மற்றும் என்எஸ்டிஐ-யில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், செயற்கை நுண்ணறிவுத் திறன்களில் (Artificial Intelligence) பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. ஐபிஎம் மற்றும் CodeDoor, Coorpacademy மற்றும் skills soft ஆகிய நிறுவனங்கள் இணைந்து, இந்த டிஜிட்டல் படிப்புக்கான உள்ளடக்கத்தை (Content) வழங்க உள்ளன.
அடுத்த தலைமுறை வேலைகளுக்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் தொழில்முறை திறன்களை, மாணவர்கள் வளர்த்துக்கொள்ள, ஸ்கில்ஸ் பில்ட் திட்டம் உதவும் என்று, ஐபிஎம் இந்தியாவின் துணைத் தலைவரும், மனிதவள மேம்பாட்டுத் துறையின் தலைவருமான சைதன்யா ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார். மாறிவரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப, அடுத்த தலைமுறையினர் தம்மைத் வடிவமைத்துக் கொள்ள இது உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.