மனு கொடுக்க வெயிலில் காத்திருந்த மாற்றுத் திறனாளி முதியவர்.. ஸ்பாட்-லயே IAS அதிகாரி எடுத்த நெகிழ வைக்கும் நடவடிக்கை.!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

உத்திர பிரதேச மாநிலத்தில் உதவி கோரி மனுகொடுக்க வந்த மாற்றுத் திறனாளி முதியவருக்கு கலெக்டர் வேண்டிய உதவிகளை செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

மனு கொடுக்க வெயிலில் காத்திருந்த மாற்றுத் திறனாளி முதியவர்.. ஸ்பாட்-லயே IAS அதிகாரி எடுத்த நெகிழ வைக்கும் நடவடிக்கை.!

உத்திர பிரதேசத்தின் கான்பூர் தேஹட் மாவட்டத்தில் உள்ளது அமருதா நகர் பஞ்சாயத்து. இந்த பகுதியை சேர்ந்தவர் தானிராம். மாற்றுத் திறனாளியான இவர் சமீபத்தில் எலெக்ட்ரிக் சைக்கிள்களை அரசு இலவசமாக அளிக்கும் திட்டம் குறித்து கேள்விப்பட்டிருக்கிறார். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியாளரிடம் தனக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்க கோரி மனுகொடுக்க சென்றிருக்கிறார்.

கொளுத்தும் வெயிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற தானிராம் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வெயிலில் காந்திருந்திருக்கிறார். அப்போது அவரை கண்ட கலெக்டர் சவுமியா பாண்டே, உடனடியாக தானிராமை சந்திக்க கட்டிடத்தை விட்டு வெளியே வந்திருக்கிறார். இதனால் அருகில் இருந்த அதிகாரிகள் பரபரப்படைந்தனர். பின்னர் சாலையில் அமர்ந்தபடி தானிராம் உடன் அவர் பேசி அவருடைய குறைகளை கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்போதே பேசிய மாவட்ட கலெக்டர் சவுமியா பாண்டே, உடனடியாக முதியவர் தானிராமுக்கு எலெக்ட்ரிக் சைக்கிள் வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக வெளிவந்துள்ள ட்விட்டர் பதிவில் தானிராமை கலெக்டர் சவுமியா பாண்டே சந்தித்து பேசும் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருவதுடன் நெட்டிசன்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் சவுமியா பாண்டேவை பாராட்டி வருகின்றனர்.

 

UP, IAS

மற்ற செய்திகள்