Battery Mobile Logo Top
The Legend
Maha Others

"வாழ்க்கைல முடிஞ்சவரை அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவோம்".. IAS ஆபிசர் பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ.. ஹார்ட்டின்களை சிதறவிட்ட நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஐஏஎஸ் அதிகாரியான அவனீஷ் சரண் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"வாழ்க்கைல முடிஞ்சவரை அடுத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணுவோம்".. IAS ஆபிசர் பகிர்ந்த நெகிழ்ச்சியான வீடியோ.. ஹார்ட்டின்களை சிதறவிட்ட நெட்டிசன்கள்..!

Also Read | 1 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் சுஷோவன் மறைவு.. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி..கலங்கிப்போன பொதுமக்கள்..!

அவனீஷ் சரண்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அவனீஷ் சரண். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் ஈடுபட்டு வரும் அவனீஷ், தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் சமூக மேம்பாடு, தன்னம்பிக்கை அளிக்கும் தகவல்களையும் அவ்வப்போது பதிவிடுவது வழக்கம். இதன் காரணமாகவே இவரை ட்விட்டர் பக்கத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், இவர் தனது ட்விட்டர் பதிவிட்டுள்ள வீடியோ பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

வைரல் வீடியோ

இந்த வீடியோவில் மேடான சாலையில் ஒருவர் கைவண்டியை தனி ஆளாக இழுத்து செல்கிறார். அந்த தள்ளுவண்டியில் சரக்கு ஏற்றியிருப்பதால் அந்த நபரால் அதனை இழுக்க முடியாமல் தவிக்கிறார். இருப்பினும் தனது முயற்சியை கைவிட விரும்பாத அவர், தொடர்ந்து சிரமப்பட்டு வண்டியை முன்னோக்கி நகர்த்துகிறார்.

IAS Officer Awanish sharan shares a video in his Twitter page

அப்போது சாலையின் வலப் பக்கத்தில் நடைபாதையில் சென்ற சிலர் அந்த நபரை பார்க்கிறார்கள். அதில் இரண்டு சிறுமிகளும் அடக்கம். சிறுமிகளின் உடன் வந்தவர் அவர்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கச் சென்று திரும்பும்போது தள்ளுவண்டியை ஒருவர் கஷ்டப்பட்டு இழுப்பதை பார்க்கிறார். உடனடியாக கையில் இருந்த ஐஸ்கிரீமை சிறுமிகளிடம் கொடுத்துவிட்டு சாலையில் இறங்கிய அந்நபர் ஓடிச்சென்று தள்ளுவண்டியை பின்னால் இருந்து தள்ளுகிறார்.

IAS Officer Awanish sharan shares a video in his Twitter page

உதவி

உடனடியாக அந்த ஊழியர் திரும்பி பார்க்கவே, தொடர்ந்து இழுக்குமாறும் தான் உதவி செய்வதாகவும் அந்த சிறுமிகளுடன் வந்தவர் சைகை செய்கிறார். இதனை கண்டு சிறுமிகள் மகிழ்ச்சியுடன் அந்த வண்டியின் பின்னால் ஓடுகின்றனர். இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவனீஷ் சரண் அந்த பதிவில்,"வாழ்க்கையில் நம்மால் முடிந்த அளவு பிறருக்கு உதவி செய்தால் எல்லோருடைய வாழ்க்கையும் எளிதானதாக இருக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | "இதான் என்னோட திறமை".. chewing gum சாப்ட்டு சம்பாதிக்கும் இளம்பெண்.. மாச சம்பளத்தை கேட்டு வியந்துபோன நெட்டிசன்கள்..!

IAS OFFICER, IAS OFFICER AWANISH, TWITTER PAGE

மற்ற செய்திகள்