'என்னது?.. 7 பேர் வந்த, இந்திய ஹெலிகாப்டரை சுட்டதே இந்திய ஏவுகணை தானா?'.. அதிர்ச்சித் தகவல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய விமானப்படையைச் சேர்ந்த எம்.ஐ.17 ரக விமானத்தைத் தாக்கியதே இந்தியா ஏவிய ஏவுகணைதான் என்கிற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளதாக என்.டி.டி.வி உள்ளிட்ட தளங்கள் குறிப்பிட்டுள்ளன.

'என்னது?.. 7 பேர் வந்த, இந்திய ஹெலிகாப்டரை சுட்டதே இந்திய ஏவுகணை தானா?'.. அதிர்ச்சித் தகவல்!

பிப்ரவரி 14-ஆம் தேதி, காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு  இந்தியா-பாகிஸ்தானின் முரண்கள் இன்னும் வெடிக்கத் தொடங்கின. அப்போது ஏவுகணைத் தாக்குதல்களையும் இந்தியா நிகழ்த்தியது. அதன் ஒரு அங்கமாகத்தான், ராணுவ விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டார். பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆனால் அதே சமயம், பிப்ரவரி 27-ஆம் தேதி காலை 10 - 10.30 மணி அளவில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த எம்.ஐ- 17 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில்தான் தற்போது அதிர்ச்சியளிக்கும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.  அதன்படி, ஸ்ரீநகரில் இருக்கும் ஏவுகணை தளத்தில் இருந்து ஏவப்பட்ட இந்திய ஏவுகணைதான், விண்ணில் ஏவப்பட்ட 12 நொடிகளிலேயே எம்.ஐ.17 ரக இந்திய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாகவும், அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த தவறு நிகழ்ந்ததாகவும் என்.டி.டி.வி தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும், புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணி பலப்படுத்தப்பட்டதாகவும், இந்திய எல்லைக்குள் நுழையும் பாகிஸ்தான் விமானங்களை சுட்டு வீழ்த்த உத்தரவிடப்பட்டிருந்ததாகவும், இந்நிலையில் அங்கு 6-7 கி.மீ அளவிலான குறைந்த உயரத்தில் பறப்பது போல் வந்த இந்திய ஹெலிகாப்டர் ரேடாரில் கண்பித்ததால், காஷ்மீரில் உள்ள ஏவுகணைத் தளங்களில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வந்த ஹெலிகாப்டர் இந்தியாவினுடையதா? என்று கண்டுபிடித்துச் சொல்லும் IFF தொழில்நுப்டம் சரியாக வேலை செய்யாததால் இந்த சிரமம் நடந்ததாகவும், இது தொடர்பான சரியான அறிக்கை, இன்னும் 20 நாட்களில் வெளியாகலாம் என்றும் அதில் இந்த தகவல்களின் உண்மைத் தன்மை என்னவென்று திட்டவட்டமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிகிறது. ஆனால் இதனிடையே பாலகோட்டில் நடந்த இந்த சம்பவத்தில், ஸ்ரீநகர் விமானப்படையின் கமாண்டிங் அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை விசாரணைக்கு பிறகு அவர் மீது தவறு இருந்தால் இந்திய விமான ராணுவ சட்டப்பிரிவு (1950)-ன் படி அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.