பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து.. 'உண்மை வெளிவரும்'.. இந்திய விமானப்படை முக்கிய அறிவிப்பு
முகப்பு > செய்திகள் > இந்தியாகுன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து வீண் வதந்திகளை, யூகங்களையும் பரப்ப வேண்டாம் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
08 டிசம்பர் 21 அன்று நடந்த சோகமான ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணத்தை விசாரிக்க IAF முப்படை விசாரணை நீதிமன்றத்தை அமைத்துள்ளது. விசாரணை விரைவாக முடிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும். அதுவரை, இறந்தவரின் கண்ணியத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், தகவல் இல்லாத ஊகங்களைத் தவிர்க்கலாம். என்று விமானப்படை தெரிவித்துள்ளது.
IAF has constituted a tri-service Court of Inquiry to investigate the cause of the tragic helicopter accident on 08 Dec 21. The inquiry would be completed expeditiously & facts brought out. Till then, to respect the dignity of the deceased, uninformed speculation may be avoided.
— Indian Air Force (@IAF_MCC) December 10, 2021
நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு புதன்கிழமை நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் புறப்பட்டனர்.
விமானம் தரையிறங்க ஐந்து நிமிடம் இருக்கும் போது, அதாவது குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி பள்ளத்தாக்குக்கு அருகே மேலே பறந்து கொண்டிருந்த போது, கடும் மேகமூட்டம் காணப்பட்டது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறி பற்றி எரிந்தது.
இதில் பயணம் செய்த பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் விமானி வருண் மட்டுமே படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் போது, மரத்தில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.ராணுவ ஹெலிகாப்டர் குன்னூர் மலைப்பகுதியில் தாழ்வாக பறந்தது. சிறிது நேரத்தில் மரத்தில் மோதி எரிந்த நிலையில் விழுந்தது என்று கூறினார்கள்.
உலகில் இருக்கும் அதிநவீன ஹெலிகாப்டர்களில் Mi-17V5வும் ஒன்று. இது தீயணைப்புப்பணி, பாதுகாப்புப் பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது. கடுமையான மழை பெய்யும் பகுதி, கடற்பகுதி, பாலைவனம் ஆகியவற்றிலும் இந்த ரக ஹெலிகாப்டர்கள் சிறப்பாக பறக்கும் தன்மை கொண்டவை. விவிஐபிகள் பயன்படுத்துவதற்காக பிரத்யேகமான வசதிகள் உள்ளன. அதாவது ஹெலிகாப்டரில் ஸ்டார்போர்டு ஸ்லைடிங் கதவு, பாராசூட் உபகரணங்கள், சர்ச்லைட் மற்றும் அவசர மிதவை அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
எனவே ஹெலிகாப்டர் எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்து விமானப்படை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துள்ளது. அதுவரை தேவையற்ற யூகங்களை பரப்ப வேண்டாம் என்று விமானப்படை கேட்டுக்கொண்டுள்ளது.
மற்ற செய்திகள்