Buffoon m Logo Top
Trigger M Logo top
Naane Varuven M Logo Top

"இதெல்லாம் இந்தியாவுல தான் நடக்கும்".. தன்னுடைய இறப்பு சான்றிதழை காணோம்னு விளம்பரம் கொடுத்த நபர்.. IPS ஆபிசர் பகிர்ந்த புகைப்படம்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தன்னுடைய இறப்பு சான்றிதழை காணவில்லை என நபர் ஒருவர் செய்தித் தாளில் விளம்பரம் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"இதெல்லாம் இந்தியாவுல தான் நடக்கும்".. தன்னுடைய இறப்பு சான்றிதழை காணோம்னு விளம்பரம் கொடுத்த நபர்.. IPS ஆபிசர் பகிர்ந்த புகைப்படம்..!

Also Read | விமானத்தில் இருந்து கிளம்பிய தீப்பொறி.. உடனடியா தரையிறக்கப்பட்ட விமானம்.. உலக அளவில் வைரலாகும் வீடியோ..!

இணையத்தின் வளர்ச்சி மனித குலத்திற்கு பல நன்மைகளை கொடுத்திருக்கிறது. தகவல் தொடர்பு துறை இன்றைய நவீன உலகில் மிகப்பெரும் உயரத்தை அடைந்திருக்கின்றன. உலகின் ஒரு மூலையில் நடைபெறும் நிகழ்வுகளை நாம் அடுத்த வினாடியே தெரிந்துகொள்ள முடிவதற்கு நமக்கு இணையம் உதவுகிறது. இதன் நீட்சியாக புழக்கத்திற்கு வந்த சமூக வலை தளங்கள் மக்களை ஒன்றிணைத்திருக்கிறது. இதன்மூலமாக பகிரப்படும் எந்த தகவலும் உடனடியாக பெரும்பான்மை மக்களின் கவனத்தை ஈர்த்துவிடுகின்றது. இதற்காகவே பலர் வினோதமான நடவடிக்கைகளில் இறங்குவது உண்டு. அப்படித்தான் செய்திருக்கிறார் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர்.

இறப்பு சான்றிதழ்

தற்போது இணையத்தில் வைரலாக பரவிவரும் இந்த விளம்பரத்தில் தனது இறப்புச் சான்றிதழை தொலைத்துவிட்டதாகவும் அதைப்பற்றிய தகவலையும் பகிர்ந்திருக்கிறார் ஒருவர். அந்த விளம்பரத்தில் "லும்டிங் பஜாரில் (அஸ்ஸாம்) காலை நேரம் காலை சுமார் 10 மணியளவில் 07/09/22 தேதியிட்ட எனது இறப்புச் சான்றிதழை நான் இழந்துவிட்டேன்" என்று ரஞ்சித் குமார் சக்ரவர்த்தி என்பவர் தனது விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் காணாமல் போன ஆவணத்தின் பதிவு மற்றும் வரிசை எண்ணையும் அவர் அந்த விளம்பரத்தில் பதிவிட்டுள்ளார்.

I have lost my death certificate man absurd newspaper ad

ஐபிஎஸ் அதிகாரி

இந்நிலையில், இந்த புகைப்படத்தை ஐபிஎஸ் அதிகாரியான ரூபின் ஷர்மா என்பவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ஷர்மா தனது பதிவில்," இது இந்தியாவில் மட்டுமே நடக்கும்" என குறிப்பிட்டுள்ளதோடு சிரிக்கும் எமோஜிக்களையும் பயன்படுத்தியிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருவதுடன், நெட்டிசன்கள் இதுகுறித்து பல்வேறு விதமாக கமெண்ட் செய்துவருகின்றனர். இந்த பதிவில் ஒருவர்,"தொலைந்துபோன சான்றிதழ் கிடைத்துவிட்டால் சொர்க்கம் அல்லது நகரம் இந்த இரண்டில் எங்கே சமர்ப்பிக்கவேண்டும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

I have lost my death certificate man absurd newspaper ad

DEATH CERTIFICATE, NEWSPAPER AD

மற்ற செய்திகள்