"அம்மா, ஒரு ஆட்டோ டிரைவர் என்ன கடத்திட்டு போறான்..." மகளின் அழைப்பால் பதறிய 'பெற்றோர்கள்'... பரபரத்த 'போலீசார்'... "ஆனா இப்டி ஒரு 'ஷாக்' இருக்கும்ன்னு யாரும் நெனச்சுருக்க மாட்டாங்க!!"
முகப்பு > செய்திகள் > இந்தியா"அம்மா, ஒரு ஆட்டோ டிரைவர் என்ன கடத்திட்டு போறான்..." மகளின் அழைப்பால் பதறிய 'பெற்றோர்கள்'... பரபரத்த 'போலீசார்'... "ஆனா இப்டி ஒரு 'ட்விஸ்ட்' இருக்குன்னு யாரும் நெனச்சிருக்க மாட்டாங்க!!"
19 வயது கல்லூரி மாணவி ஒருவர் ஆட்டோ டிரைவர் ஒருவரால் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், போலீசார் தீவிர விசாரணையில் இறங்கிய பிறகு தெரிய வந்த விஷயங்கள், பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளிக் கொண்டு வந்தது.
கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதியன்று, ஹைதராபாத் பகுதியில் 19 வயது இளம்பெண் ஒருவர் காணாமல் போனதாக போலீசாருக்கு புகார் ஒன்று வந்துள்ளது. கல்லூரி முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது, ஆட்டோ ஓட்டுநர் சரியான இடத்தில் இறக்காமல், தன்னை கடத்திச் சென்றதாக அந்த இளம்பெண் தனது பெற்றோர்களிடம் அச்சத்துடன் மொபைல் போனில் கூறியுள்ளார். அதன் பிறகு, அந்த பெண்ணின் மொபைலையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதனைத் தொடர்ந்து, அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் பகிரப்பட்ட நிலையில், அன்னோஜிகுடா என்னும் பகுதிக்கு அருகே, உடம்பில் சில காயங்களுடன் அந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டுள்ளனர். தொடர்ந்து, அருகேயுள்ள மருத்துவமனை ஒன்றில் அந்த பெண்ணை சேர்த்துள்ளனர். அதன்பிறகு, தன்னை ஒரு ஆட்டோ ஓட்டுநர் கடத்திச் சென்று அடித்ததாகவும், அதன் பின் தன்னை வேன் ஒன்றில் வைத்து, தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இளம்பெண் அளித்த தகவலின் படி, ஆட்டோ ஓட்டுநரை கண்டுபிடித்த போலீசார், அவரிடம் விசாரணை செய்ததில் அந்த ஆட்டோ ஓட்டுநர், பெண் கூறிய இடத்தில், அந்த நேரத்தில் அவர் இல்லை என போலீசாருக்கு தெரிய வந்தது. தொடர்ந்து, மீண்டும் அந்த பெண்ணையே விசாரித்த போது தான் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. முதலில் கூறிய தகவலில் இருந்து சற்று மாறுப்பட்ட தகவலை முன்னக்குப் பின் முரணாக, அந்த பெண் கொடுத்துள்ளார். அதே போல, தனது உடலில் போதை பொருள் ஏற்றியதாகவும் கூறியுள்ளார். இதனால், இளம்பெண் பொய் கூறுவது போல போலீசாருக்கு தோன்றியுள்ளது.
அதன்பிறகு, 100 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கிட்டத்தட்ட இரண்டு தினங்களாக போலீசார் சோதனை செய்தனர். தன்னைக் கடத்திக் கொண்டு போவதாக பெண் குறிப்பிட்ட இடத்தின் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்த போது, இளம்பெண்ணை கடத்திச் செல்லாமல், அந்த ஆட்டோவில் இருந்து தனியாக இறங்குவது தெரிந்தது. அது மட்டுமில்லாமல், அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து மற்றொரு ஆட்டோவில் ஏறி, அன்னோஜிகுடாவில் இறங்கியுள்ளார். அப்போது பெற்றோர்கள் அழைக்கும் போது அதனை அவர் தவிர்த்துள்ளதும் தெரிய வந்தது.
தான் கடத்தியதாக கூறப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு பெண்ணிடம் விசாரித்த பின்பு தான் உண்மை என்ன என்பது தெரிய வந்துள்ளது. முன்னதாக, குடும்பப் பிரச்சனைகள் காரணமாக, அந்த பெண் வீட்டிலிருந்து வெளியேற வேண்டி நாடகத்தை நடத்தியுள்ளார். அதன்பிறகு போலீசார் தன்னைத் தேடி வருவது தெரிந்ததும் பயந்து போன பெண், தான் காயங்களுடன் தப்பித்தது போன்ற பொய் கதை ஒன்றை உருவாக்கியுள்ளார்.
அதே போல, அப்பகுதி ஆட்டோ டிரைவர் ஒருவர் மீது, வேண்டுமென்றே அந்த பெண் புகாரளித்துள்ளார். இதற்கு காரணம், முன்னதாக அந்த பெண்ணிற்கும், ஆட்டோ டிரைவருக்கும் ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை காரணமாக காட்டி, ஆட்டோ டிரைவரை சிக்க வைக்க இளம்பெண் முயற்சித்தும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி ஆட்டோ ஓட்டுநர்களை குற்றவாளிகள் கோணத்தில் பார்த்த போலீசார், அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.
இந்த புகாரை முற்றிலுமாக மூடிய போலீசார், இதற்காக மூன்று நாட்கள் தூக்கமின்றி, ஓய்வும் இல்லாமல் இந்த குற்றத்தை தீர்க்க உழைத்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்