‘கொரோனா சிகிச்சை பெற்ற கணவரை காணோம்’.. மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த ‘பதில்’.. அதிர்ச்சியில் உறைந்த மனைவி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா சிகிச்சை பெற்று வந்த கணவரை காணவில்லை என மனைவி புகார் அளித்த நிலையில், அவரது உடலை தகனம் செய்துவிட்டோம் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![‘கொரோனா சிகிச்சை பெற்ற கணவரை காணோம்’.. மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த ‘பதில்’.. அதிர்ச்சியில் உறைந்த மனைவி..! ‘கொரோனா சிகிச்சை பெற்ற கணவரை காணோம்’.. மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த ‘பதில்’.. அதிர்ச்சியில் உறைந்த மனைவி..!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/hyderabad-woman-claims-her-covid19-positive-husband-missing-thum.jpg)
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு காரணமாக காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்பெண்ணுடன் அவரது இரண்டு மகள்களும் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதனை அடுத்து கடந்த 16ம் தேதி மூவரும் குணமடைந்து வீடு திரும்பினர். ஆனால் இவர்களுக்கு முன்னதாக அப்பெண்ணின் கணவர் கடந்த ஏப்ரல் மாதம் 27ம் தேதி தனியார் மருத்துவமனையில் ஒன்றில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் ஏப்ரல் 30ம் தேதி அவரும் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்வில்லை. இதனால் கொரோனா சிகிச்சை பெற்று வந்த தனது கணவரை காணவில்லை என தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி.ராமாவிடம் ட்விட்டரில் அப்பெண் புகார் அளித்தார். இதனை அடுத்து அப்பெண்ணின் கணவர் இறந்துவிட்டதாகவும், அவரை கடந்த மே 1ம் தேதி அன்று தகனம் செய்துவிட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
மேலும் இதுதொடர்பாக அந்த நபரின் குடும்பத்தினரிடம் உரிய தகவல் தெரிவித்துவிட்டதாகவும், அப்பெண் காரணமின்றி மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
!['2020 ஏன் எங்கள இப்படி தண்டிக்கிற'?... 'இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ'... '500 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு'... அமெரிக்காவை புரட்டிய பெரும் சோகம்! '2020 ஏன் எங்கள இப்படி தண்டிக்கிற'?... 'இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ'... '500 ஆண்டுகளில் இல்லாத பேரழிவு'... அமெரிக்காவை புரட்டிய பெரும் சோகம்!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/us-michigan-faces-500-year-flood-event-after-dams-fail.jpg)
![டிக்டாக்கில் அதிக ‘லைக்ஸ்’ வாங்க ஆசை.. இளைஞர் செய்த ‘கொடூர’ செயல்.. நெல்லையை அதிரவைத்த சம்பவம்..! டிக்டாக்கில் அதிக ‘லைக்ஸ்’ வாங்க ஆசை.. இளைஞர் செய்த ‘கொடூர’ செயல்.. நெல்லையை அதிரவைத்த சம்பவம்..!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tirunelveli-youth-arrested-by-police-for-making-tiktok-video-with-cat.jpg)
!['மறைந்த முதல்வர்' ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவு இல்லமாக்க 'அவசர சட்டம்'! - தமிழக அரசு ஆணை! 'மறைந்த முதல்வர்' ஜெயலலிதாவின் 'வேதா நிலையம்' இல்லத்தை நினைவு இல்லமாக்க 'அவசர சட்டம்'! - தமிழக அரசு ஆணை!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/jayalalithas-veda-nilayam-to-memorial-tn-govt-promulgates-ordinance.jpg)
!["மக்களே இத நீங்க பாத்துருக்கீங்களா?".. 'கெத்தா' ஆரம்பிச்சியே 'கைப்புள்ள?'.. 'டிக்டாக்' சாகசத்தால் 'பாடகருக்கு' நேர்ந்த 'விபரீதம்'! "மக்களே இத நீங்க பாத்துருக்கீங்களா?".. 'கெத்தா' ஆரம்பிச்சியே 'கைப்புள்ள?'.. 'டிக்டாக்' சாகசத்தால் 'பாடகருக்கு' நேர்ந்த 'விபரீதம்'!](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/world/singers-teeth-broken-in-a-tiktok-challenge.jpg)
![“கொரோனாவைக் கண்டறிய உதவும் புதிய செயலி!”.. 'கூகுள், ஆப்பிள்' இணைந்து 'உருவாக்கிய' இந்த 'ஆப்' அப்படி என்னதான் செய்யும்? “கொரோனாவைக் கண்டறிய உதவும் புதிய செயலி!”.. 'கூகுள், ஆப்பிள்' இணைந்து 'உருவாக்கிய' இந்த 'ஆப்' அப்படி என்னதான் செய்யும்?](https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/technology/google-and-apple-jointly-launches-covid19-contact-tracing-app.jpg)