'போன வருஷம் நடந்த நகை திருட்டுக்கும்...' 'பக்கத்து வீட்டு பெண் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸுக்கும் இருந்த ஸ்பெஷல் கனெக்ட்...' - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத்தில் உள்ள ரச்சகொண்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட சாய்புரி காலனியில் வசித்துவரும் அங்கிடி ரவிகிரண், 2019-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதியன்று வீட்டைப் பூட்டிவிட்டு கோவிலுக்குச் சென்றிருக்கிறார்.

'போன வருஷம் நடந்த நகை திருட்டுக்கும்...' 'பக்கத்து வீட்டு பெண் வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸுக்கும் இருந்த ஸ்பெஷல் கனெக்ட்...' - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!

ஆன்மீக பயணம் முடிந்து திரும்பி வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்த நிலையில் இருந்திருக்கிறது. முதலில் அவர் வீட்டை பூட்டாமல் மறந்து சென்று விட்டோமோ என நினைத்துள்ளார்.

அதன் பின்பு தான், வீட்டிலிருந்த நகைகள் காணாமல் போய்விட்டதை தெரிந்துக்கொண்டார். பதறிப்போன அவர், நகைகள் திருட்டுப் போய்விட்டதாக காவல்நிலையத்தில் உடனடியாக  புகார் அளித்திருக்கிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் ரவிகிரணின் பக்கத்து வீட்டு பெண்மணி ஒருவர் வாட்ஸ்அப்பில் தனது போட்டோ ஒன்றை ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார். அந்த போட்டோவை பார்த்த ரவி கடுமையாக அதிர்ச்சியடைந்தார். அந்தப் பெண், தன் வீட்டில் திருட்டுப்போன நகையைப் போன்றே ஒரு நகையை அணிந்திருப்பதை கவனித்த அவர், இதுகுறித்து உடனடியாக  போலீசாரிடம் தெரிவித்தார். அந்த பெண்ணிடம் பலகோணங்களில் விசாரணை செய்தபோது, அவர் மகன் பொன்னுகோட்டி ஜிஜேந்தர் தான் நகையைத் திருடியதை ஒப்புக்கொண்டார்.

அவரைக் கைதுசெய்த போலீசார், அதற்கு உதவியாக இருந்த அந்த பெண்மணிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

மற்ற செய்திகள்